மஞ்சிமா பதிவிட்ட #10YearsChallenge புகைப்படம். எப்படி இருக்கார் பாருங்களே.
மலையாள மொழியில் இருந்து வந்த பல நடிகைகள் தமிழ் இளைனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிங்கர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர். நடிகை மஞ்சிமா மோகனின் தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் தாயார் ஒரு நடன கலைஞர் ஆவார். இவர் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். இதனைத்தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
https://www.instagram.com/p/CCIJZwDpUTX/
அந்த படம் வெளியானதை தொடர்ந்து தான் மஞ்சுமா மோகனுக்கு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மஞ்சிமா மோகன். அதற்குப் பின்னர் இவர் தமிழில் சில படங்களில் மட்டும் நடித்தார். தற்போது இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள் தன்னுடைய பழைய புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மின்னலை விட வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் கவலையிலும், பீதியிலும் உள்ளார்கள். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக மக்கள் பல்வேறு வேலைகளைச் செய்தும், சோஷியல் மீடியாவில் பிசியாக இருந்தும் வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CBrzs-SJNWB/
அந்த வகையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள் பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்த தன்னுடைய புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் மஞ்சிமா மோகன் பார்ப்பதற்கு அழகாக உள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிகை மஞ்சுமா மோகன் ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.