கடந்த மாதம் பைக் லைசன்ஸ் இந்த மாதம் சொகுசு பைக் - அஜித்துக்கு நன்றி தெரிவித்து மஞ்சு வாரியர் வெளியிட்ட வீடியோ.

By Rajkumar · 18/2/2023

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி திரைப்படம் நடித்துள்ளார் வாரிசு திரைப்படத்துடன் ஒன்றாக வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். மேலும் முன்னணி கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கம் முதலே நல்ல விமர்சனங்களை இப்படம் பெற்று வரும் நிலையில் படம் வெளியாகிய முதல் நாள் விஜய்யின் வாரிசு படத்தை விட அதிகமான வசூல் செய்ததாக கூறப்பட்டது. மேலும் துணிவு படத்தின் பஜ்ஜெட் 200 கோடி என்பதினால் இன்னும் சில நாட்களில் அதனை விட அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீட்டிற்கு காரணமானவர்களில் ஒருவர் நடிகை மஞ்சு வாரியர்.

மஞ்சு வாரியர்:

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் :

அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

அஜித்துடன் லடாக் பைக் ரைடு :

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அஜித்துடன் இணைந்து லடாக் பகுதிகளில் பைக் ரைடு செய்தார். இந்த நிலையில் பைக் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றிருந்தார். சர்ணாகுளம் காக்கநாடு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அதிகாரிகளின் முன்னிலையில் சரியாக பைக் ஒட்டி காண்பித்து ஓட்டுநர் உரிமத்தை முறைப்படி பெற்று இருந்தார். அஜித்தின் அடுத்த பைக் Tripல் மஞ்சு வாரியரு செல்ல இருப்பதால் அவசர அவசரமாக ஓட்டுநர் உரிமத்தை வாங்கி இருக்கிறார் மஞ்சு வாரியர்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த BMW பைக் வாங்குவதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும், அதில் தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் ஒரு நல்ல இடம். நான் ஒரு நல்ல சவாரி செய்பவராக மாறுவதற்கு முன்பு ஒரு வழிக்கு செல்ல வேண்டும், அதனால் நான் சாலைகளில் தடுமாறுவதை நீங்கள் கண்டால், தயவுசெய்து மன்னித்து விடுங்கள். என்னைப் போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்த அஜித் சாருக்கு நன்றி

Tamil Behind Talkies AMP · Quick view
View full