சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்” திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை மஞ்சு வாரியார் அவர்களை மலையாள திரை உலகம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் இவர் அறிமுகமான அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் முதலில் விளம்பரப் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து உள்ளார். மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் திலீப். நடிகர் திலீப்பும், நடிகை மஞ்சு வாரியரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் இருவரும் 1998 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகளும் உள்ளார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பிறகு நடிகர் திலீப் அவர்கள் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கூட நடிகர் திலீப் அவர்கள் நடிகை பாவனாவை கூலிப் படையை விட்டு ஏவிய புகாரில் கைது ஆனார். பின் இதற்காக இவர் 85 நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது தான் நடிகர் திலீப் ஜாமீனில் இருந்து வெளியே வந்து இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த நிலையில் நடிகர் திலீப் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, என்னை விவாகரத்து செய்து பிரிந்த மஞ்சு வாரியர் மீது எனக்கு எந்த ஒரு கோபமும், விரோதமும் இல்லை. அவருடன் இணைந்து படம் நடிக்கவும் எனக்கு தயக்கமில்லை.

Advertisement

Advertisement

சரியான கதை அமைந்தால் நான் மஞ்சு வாரியர் உடன் சேர்ந்து படம் நடிப்பேன் என்று கூறினார். இதற்கு நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாள தொலைக்காட்சி பேட்டியில் பதில் அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, திலீப் அவர்கள் கனவில் வேண்டுமானால் என்னுடன் சேர்ந்து நடிக்கலாம். நிஜத்தில் அது நடக்கவே நடக்காது. நான் அவருடன் இணைந்து நடிக்கவே மாட்டேன் என்று கோபத்துடன் கூறினார். விவாகரத்துக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் நடித்த எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் அளவு ஹிட். ஆனால், நடிகர் திலீப் நடித்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement