பூஜா, ராஷ்மிகா என்று சென்று கொண்டு இருக்கும் விஜய், 40+ நடிகையுடன் ஜோடி சேரும் அஜித் (Ak61 நாயகி யார் தெரியுமா ? )

By Rajkumar · 5/5/2022

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சில மாதங்களுக்கு முன் ரிலீசானது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். என்னதான் பல நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை வலிமை படம் பெற்றது.

இந்த நிலையில் வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ படத்தின் முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மீண்டும் இணைந்த கூட்டணி :

மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இயக்குனரிடம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் தற்போது வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Ak61வில் அடிபட்ட தபுவின் பெயர் :

மேலும், இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட்செய்ய இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

மீண்டும் 40+ நடிகை :

அதன் பின்னர் தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 40 வயதை கடந்த மஞ்சு வாரியர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து பல விருதுகளை குவித்து இருக்கிறார். சமீப காலமாகவே நடிகர் அஜித் இளம் நடிகைகளுடன் இணைந்து நடிப்பது இல்லை. விஸ்வாசம் படத்திற்கு பின்னர் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்து இருந்தார்.

இளம் நடிகைகளை தவிர்க்கும் அஜித் :

அதை தொடர்ந்து இறுதியாக வெளியான 'வலிமை' படத்தில் நாயகியாக ஹுமா குரேஷி நடித்து இருந்தார். Ak61 படத்திலாவது இளம் நடிகை அல்லது திரிஷா, நயன் போன்ற முன்னனி நடிகைகள் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் அஜித் 40+ நடிகையுடன் தான் நடிக்க இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். அஜித்துக்கு நிகராக இருக்கும் விஜய் பூஜா, ராஷ்மிகா என்று தொடர்ந்து இளம் நடிகையுடன் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full