கில்லி கலெக்சனை முறியடித்த அஜித்தின் மங்காத்தா? - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

By subhashini · 24/1/2026

சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா போன்ற படங்களெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது அஜித்தின் உடைய மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று மங்காத்தா.

இந்த படத்தை தயாநிதி அழகிரி, மங்காத்தா. இரத்தினவேல் ஆகியோர் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தில் அஜித் குமார், அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இன்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மங்காத்தா படத்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு.

மங்காத்தா

மேலும், அஜித் நடிப்பில் வெளியான 50வது படம் மங்காத்தா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள், இசை, சண்டை காட்சிகள் என அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய்- அஜித் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, மங்காத்தாவில் மீண்டும் இன்று வாழும் நேரம். படத்தினுடைய கிளைமாக்ஸ் சொல்லி அனுபவத்தை கெடுத்து விடாதீர்கள். மங்காத்தாவை கொண்டாடுவோம் என்றார்.

ரீ ரிலீஸ் படம்:

அதுமட்டுமில்லாமல் மங்காத்தா படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நாகார்ஜுனா. அவருடைய கால்ஷீட், சம்பளம் எதுவும் சரியாக பொருந்தவில்லை. அதனால் தான் அர்ஜுன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் ஓகே சொன்னால் மங்காத்தா 2 எடுக்க தயாராக இருப்பதாகவும் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

View this post on Instagram

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)

மங்காத்தா வசூல்:

இப்படி இருக்கும் நிலையில் மங்காத்தா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது விஜயின் கில்லி படம் தான். அந்த படத்தையே தற்போது அஜித்தின் மங்காத்தா படம் முறியடித்திருக்கிறது. கில்லி படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாளில் தமிழகத்தில் 2.9 கோடி வசூலித்தது. ஆனால் மங்காத்தா படம் முதல் நாளில் 3.1 கோடி வசூலை வாரிசுருட்டி கில்லி சாதனை முறியடித்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full