மருத்துவமனையில் மனோபாலாவின் கடைசி நிமிடங்கள் - பாட்டு பாடி தந்தைக்கு தைரியம் கொடுத்த மகன். கலங்க வைக்கும் வீடியோ.

By Siva · 9/5/2023

மனோபாலாவின் இறுதிதருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை அவரது மகன் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வேட்டை, பாம்பு சட்டை ,சதுரங்க வேட்டை 2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா.

உடல்நலக் குறைவு :

அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார்.இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் தான் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஆப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

https://www.youtube.com/watch?v=VKR1SWxrYD0

கல்லீரல் பாதிப்பு :

அவருக்கு அஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டாகவும் பின்னர் அவர் உடல் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் உடல்நலன் தேறி மீண்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மனோ பாலா காலமாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காலாமானார்.

குடிப்பழக்கம் தான் காரணமா :

மனோபாலாவின் இறப்பிற்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய், சத்யராஜ், பாரதிராஜா என்று பல்வேறு முக்கிய பிரபலங்கள் மனோபாலாவின் இறப்பிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவரது இறப்பிற்கு காரணம் அதிகப்படியான குடிப்பழக்கம் தான் என்றும் கூறப்பட்டது. இறப்பிற்கு வந்த மன்சூர் அலிகான் கூட இதையே தான் சொன்னார்.

மனோபாலாவின் கடைசி வீடியோ :

இறப்பதற்கு முன் வரை மனோபாலா waster paper என்ற யூடுயூப் பக்கத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் மனோபாலாவின் இறுதி நிமிடங்களை தற்போது அவரது youtube சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் மனோபாலாவின் மகன் அப்பாவை தேற்றுவதற்காக பாட்டு பாடுகிறார். Manobala's last moments என குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். மனோபாலாவுக்கு ஒருவர் உணவு, தண்ணீர் ஊட்டி விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full