2 மாசத்துக்கு முன் தான் அவர் சகோதரி சொன்னார் - மனோஜ் பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம்
மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து நெப்போலியன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு செய்தி தான். சமீபத்தில் தான் இவர் இதய பிரச்சினை காரணமாக சிகிச்சை எடுத்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு இவர் ஓய்வு நிலையில் இருந்தார்.
பின் திடீரென்று நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் உயிரிழந்தார். தற்போது இவருக்கு 48 வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. இவருடைய மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் பலருமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சென்னை நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் தான் பாரதிராஜாவினுடைய வீடு இருக்கிறது. அங்குதான் மனோஜ் பாரதிராஜாவின் இறுதி சடங்குகள் நடைபெற நடைபெற இருக்கிறது.
மனோஜ் பாரதிராஜா மறைவு:
பிரபலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து நடிகர் நெப்போலியன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ஆகி வருகிறது. அதில் அவர், மதிற்புக்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் குருநாதர் இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம். மிகவும் வேதனையாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=SRSw37g4tSI
நெப்போலியன் பதிவு:
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மலேசியாவில் வசிக்கும் எங்கள் குருநாதரின் மகள் ஜனனி வீட்டிற்கு சென்று இருந்தோம். அப்போது வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் விசாரித்தோம். அப்போது ஜனனி, அவரது அண்ணன் மனோஜ் உடல் நிலைப்பற்றி விவரித்தார். இப்பொழுது நன்றாக இருக்கிறார் என்று சொன்னார். அதற்குள் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.
மனோஜ் பாரதிராஜாவுக்கு இரங்கல்:
எங்கள் குருவிற்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், அவரது உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரு. பாரதிராஜா அவர்களின் கோடானு கோடி ரசிகர்களுக்கும், அன்புத்தம்பி மனோஜின் ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார். இவரை தொடர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மனோஜ் பாரதிராஜா குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் மனோஜ் பாரதிராஜா. இவர் தன் தந்தை இயக்கிய தாஜ்மஹால் படத்தில் தான் நடிகன் ஆக அறிமுகம் ஆகி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். கடந்த ஆண்டு இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்து இருந்தார். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது.