வில்லனாக நடித்த மன்சூருக்கு 4 லட்சம் சம்பளம். ஹீரோவா நடிச்ச விஜய்க்கு எவ்ளோ தெரியுமா ? மன்சூர் அலிகான் சொன்ன Flashback

By Rajkumar · 17/8/2023

மன்சூர் அலி கானை விட விஜய் குறைவாக சம்பளமாக வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. மேலும், நேற்று நடிகர் அர்ஜுன் பிறந்தநாள் முன்னிட்டு லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது.

லியோ படம்:

அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதோடு அந்த வீடியோவில் அர்ஜுன் தெறிக்க என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மன்சூர் அலி கானை விட விஜய் குறைவாக சம்பளமாக வாங்கி இருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது.

விஜய்- மன்சூர் அலிகான் படங்கள்:

விஜய்- மன்சூர் அலி கான் இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. நாளைய தீர்ப்பு, தேவா, செந்தூரப்பாண்டி, மின்சார கண்ணா போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் குடும்ப நண்பர்களாகவும் இருக்கிறார்கள். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ படத்தில் மன்சூர் அலிகான்- விஜய் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று தான் வசந்த வாசல்.

விஜய்- மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம்:

அந்த படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். அதில் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 4 லட்சம். ஆனால், அந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஜய்க்கு இரண்டு லட்சம் தான் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். வில்லனை விட குறைவாக ஹீரோ விஜய் சம்பளம் வாங்கி இருந்தார். ஆனால், தற்போது லியோ படத்தில் பல கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் அளவிற்கு விஜய் உயர்ந்திருக்கிறார். இது குறித்து கூட பேட்டியில் மன்சூர் அலிகான், விஜயின் இந்த வளர்ச்சி பெருமையாக இருக்கிறது. ஆனால், நான் இன்னும் அதே லெவலில் தான் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். தற்போது இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full