'B*** ஜாக்கெட் தெச்சு போட்ருக்காங்க' - நடிகையை குறித்து மன்சூர் அலிகான் பேசிய வீடியோ - லோகேஷால் வைரலாகும் விடீயோக்கள்.

By Arun · 14/6/2022

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

https://twitter.com/DirLokeshFC/status/1535157332379783168

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இதனிடையே சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வீடு இருக்கிறது. இந்த வீடு அரசு புறம்போக்கு நிலம் 2500 வீடு அடியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், இங்கு பல ஆண்டுகளாக இவர்கள் இருந்து வந்ததாகவும் புகார் எழுந்தது.

இதையும் பாருங்க : 'நயன்தாரா திருமணத்த பத்தி என்ன நினைக்கிறீங்க' - பத்திரிகையாளர் கேள்வியால் கடுப்பான சீமான். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

மன்சூர் அலிகான் நடித்து இருக்கும் படம்:

அதன் காரணமாக அரசு நிலத்தை மீட்கும் பொறுப்பில் சில மாதங்களுக்கு முன் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலி வழக்கு தொடர்ந்திருந்தார். இன்னொரு பக்கம் இவர் படத்தில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=boBtpD_VB5o

லோகேஷ் அளித்த பேட்டி:

இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை ராபின்சன் தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளிவந்த கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் மன்சூர் அலிகான் குறித்து கூறியிருந்தார்.

மன்சூர் அலிகான் குறித்து லோகேஷ் சொன்னது:

அதில், கைதி படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று தான் இருந்தோம். ஏன்னா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஆட்டிடியூட் ரொம்ப பிடிக்கும். அவருடைய இன்டர்வியூ ஒன்று பார்த்தேன். ஆங்கர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். ஆனால், இவர் ஒரு மரத்திலிருந்து இலையைப் பறித்து பிபி ஊதி இருந்தார். நிஜமாகவே யாரும் இந்த மாதிரி பண்ணி இருக்கவே மாட்டார்கள். அதை பார்த்து நான் வியந்து விட்டேன். எப்படியாவது அவரை படத்தில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார்.

https://twitter.com/VijayGeek/status/1535184937166331904

மன்சூர் அலிகான் பழைய வீடியோ:

இப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எப்போது மன்சூர் அலிகான் பற்றி பேசினாரா, அப்போது முதல் மன்சூர் பற்றிய பழைய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மன்சூரலிகான் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் நடிகை சந்திரிகாவை பற்றி பேசி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சந்திரிகா ப்ரால ஜாக்கெட் தெச்சு போட்ருக்காங்க என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருந்த பழைய வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full