கூவத்தூர் அதிமுக பிரச்சனையில் திரிஷாவை இழுத்துவிட்டு இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது இதுகுறித்து மன்சூர் அலிகான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக,அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தமிழக அரசியலில் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த விடுதியில் பல நடிகைகளும் தங்கி உல்லாசம் செய்து இருந்ததாக வதந்திகள் வந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கூறியிருப்பது, எடப்பாடிக்கு குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது. ஆனா, அவர் திரிஷா வேணும்னு கேட்டுட்டான். நடிகர் கருணாஸ் தான் இது எல்லாம் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.

Advertisement

கூவத்தூர் சர்ச்சை:

அங்கு நிறைய நடிகைகள் இருந்தார்கள். யார் யாருக்கு எந்த நடிகை வேண்டுமோ அதை ஏற்பாடு செய்து தந்திருந்தார். திரிஷாவுக்கு மட்டுமே 25 லட்சம் கொடுத்து இருந்தாங்க. நான் என்ன சொல்றது என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்க்கு பெப்சி அமைப்பு உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரிஷா ‘‘கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனதிர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவர்கள் உறுதியாக சொல்கிறேன். அதுகுறித்து இனி என் வழக்கறிஞர்கள் பார்த்துக்கொள்வார்கள் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மன்சூர் அலிகான் ஆடியோ :

இப்படி ஒரு நிலையில் இந்த் விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ காலையிலிருந்து என்னை நூற்றுக்கணக்கானோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். என் திரைத்துறையில் உள்ள சக நடிகையை அரசியல்வாதி ஒருவர், கேவலமான, அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக பேசியுள்ளதாக சொன்னார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட நபர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

சமத்துவம் படைத்த தமிழகத்தில் இப்படியான கீழ்த்தரமான பேச்சு கண்டிக்கத்தக்கது.  எதற்காக இப்படி பேசினார் என்று தெரியவில்லை. சுயலாபத்துக்காகவா?. சக திரைத்துறை நடிகர் குறித்து மோசமான முறையில் பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. இதுபோன்ற பேச்சுகள் ஆபத்தானவை, அருவருக்கத்தக்கவை. இதற்கு உரியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement