போதை பொருள் வழக்கில் மன்சூர் அலிகான் மகனுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு, என்ன தெரியுமா?
மன்சூர் அலிகான் மகனின் போதைப் பொருள் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கொடுத்திருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாப்பிக்கே மன்சூர் அலிகான் மகன் குறித்த செய்தி தான். சமீப காலமாகவே போதைப்பொருளை ஒழிப்பதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலை தடுக்க தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் ஆங்காங்கே போதை பொருள் கடத்தல் கும்பலையும் கைது செய்து இருக்கிறது. அந்த வகையில் மன்சூர் அலிகான் மகனும் போதைப் பொருள் வழக்கில் கைதாகி இருந்த சம்பவம் தான் இணையத்தில் வைரலாகி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருள்கள் விற்பனை செய்து இருந்தார்கள். இதை அறிந்த போலீஸ் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தது.
மன்சூர் அலிகான் மகன் கைது:
இதனால் சில கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் சிக்கி இருந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து துலக்கை போலீசார் கைது செய்து இருந்தார்கள். இதை அடுத்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணையும் நடத்தி இருந்தார்கள். இதை அடுத்து விசாரணைக்கு தன்னுடைய மகனை போலீஸ் வேனில் அழைத்து செல்லும்போது மன்சூர் அலிகான், ஏன் தப்பு பண்ற, தைரியமாய் இரு, சாப்டியா என்று அறிவுரை சொல்லி இருந்தார்.
மன்சூர் அலிகான் பேட்டி:
பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மன்சூர் அலிகான், போதைப் பொருள் கடத்தல் வழக்கு இரண்டு மாதமாக நடக்கிறது. அதில் சில மாணவர்களை கைது இருந்தார்கள். அதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருடைய போனில் என்னுடைய மகன் நம்பர் இருந்திருக்கிறது. அதை வைத்து தான் என்னுடைய மகனையும் கைது செய்து இருக்கிறார்கள். என்னுடைய மொபைலில் கூட தான் நிறைய நடிகைகள் உடைய நம்பர் இருக்கிறது. அதற்காக தவறாக சொல்ல முடியுமா? நான் என் மகனை காப்பாத்தணும் என்று சொல்ல வரவில்லை.
வழக்கு குறித்த தகவல்:
என் மகன் சிகரெட் பிடிப்பான் என்று இப்போ தான் தெரிகிறது. இண்டு, இடுக்கு, பள்ளி, கல்லூரி, சந்தை மார்க்கெட் என தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் எப்படி வந்தது? கிலோ கணக்கில் பிடிக்கிறார்கள், கோடிக்கணக்கில் பிடித்ததாக சொல்கிறார்கள், அதெல்லாம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? எங்கு தான் போகிறது. எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்று பேசி இருந்தார். இதை அடுத்து மன்சூர் அலிகான் மகனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.
https://www.youtube.com/watch?v=_8zozRL2LLI
நீதிமன்றம் உத்தரவு:
மன்சூர் அலிகான், துக்ளக் ஜாமீன் கோரி கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். இருந்தும் நீதிமன்றம் அவருடைய மனுவை தள்ளுபடி செய்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மன்சூரலிகான் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது
மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிடமிருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை. மற்ற குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தான் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதனால் போதை பொருள் வைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.