இந்த பட ஷூட்டிங்கில் பல சம்பவங்கள் நடந்தது - விழாவில் மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்
கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் விழாவில் மன்சூர் அலிகான் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் படத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தினுடைய மறு வெளியீட்டை ஒட்டி சென்னை கமலா திரையரங்கில் படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பட குழுவினர் பலருமே கலந்து கொண்டு விஜயகாந்த் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த விழாவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், விஜயபிரபாகரன், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்:
அப்போது விழாவில் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் மன்சூர் அலிகான், அன்பின் உருவமாக வாழ்ந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கேப்டனுடைய நூறாவது படத்தில் நான் அறிமுகமானேன். சென்னையில் நல்ல மழை. கிட்டத்தட்ட வெள்ள மழை என்று சொல்லலாம். அப்போது ரயிலில் ஒரு மலைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த மலையில் பாதை கிடையாது. 20 கிலோமீட்டர் கார் போக முடியாது. அங்கே ராவுத்தர் பாதை போட்டு ஜிப்பில் அழைத்துப் போனார்.
https://www.youtube.com/watch?app=desktop&v=3FyZQvG3sPw
விழாவில் மன்சூர் அலிகான்:
அப்படி போகும்போது மஞ்சளும் பச்சையும் கலந்த நீட்டமான பாம்பு சென்று கொண்டிருந்தது ஐயோ பாம்பு என்று நான் சொன்னதுமே, சத்தம் போடாதீங்க இல்லைன்னா ஹீரோயினி போயிடுவாங்க என்று அசிஸ்டன்ட் இயக்குனர் என் வாயை பொத்திக் கொண்டார். அந்த மாதிரியான ரிஸ்க்கான இடம் தான் அந்த மலை. ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயினி சரண்யா. ஆனால், அவர் அந்த மலையை பார்த்துவிட்டு படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
https://www.youtube.com/watch?v=6fCJZfP6mbc
படம் பற்றி சொன்னது:
60 குதிரைகள், ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட், அங்கு உள்ள மக்கள் என பலர் நடித்திருந்தார்கள். படப்பிடிப்பின் போது மோகன் என்ற தொழில்நுட்ப கலைஞர்கள் இறந்துவிட்டார். அதனால் சில நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைத்திருந்தோம். சுந்தர்ராஜன் சார் பயணித்த வண்டியும் விபத்தில் சிக்கி டிரைவர் இறந்து விட்டார். இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்தது. படத்தினுடைய இறுதி நாள் அன்று தான் பிரபாகரன் தம்பி பிறந்தார். அது ரொம்ப செண்டிமெண்ட்.
விஜயகாந்த் பற்றி சொன்னது:
சண்டைக் காட்சிகளில் கேப்டன் என்னை படுத்தியதை விட அவரை தான் நான் படுத்திவிட்டேன். அன்று நான் ஒரு புது நடிகன் என்று எனக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார். செட்டை விட்டு அவர் வெளியே போகவே மாட்டார். பைட்டர்ஸ் உடன் பேசிக்கொண்டு அவர்களை விளையாட வைத்துக் கொண்டே தான் இருப்பார் என்று எமோஷனலாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.