உதட்டு வலிக்க முத்தம் கொடுத்துவிட்டு, முட்டி வலிக்க டான்ஸ் ஆடிட்டு ஸ்ட்ரைட்டா CM - விஜய்யை மறைமுகமாக சாடிய மன்சூர்.

By Siva · 26/2/2024

விஜய் அரசியல் குறித்து மன்சூர் அலிகான் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

றகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிக். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

இதனை அடுத்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.இது ஒரு பக்கம் இருக்க, மன்சூர் அலிகான் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை துவங்கி இருக்கிறார். இதை அடுத்து இந்த கட்சியின் சார்பில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

மன்சூர் அலிகான் பேட்டி:

இந்த நிலையில் தமிழ் தேசிய புலிகள் என்ற தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மாற்றம் செய்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது கட்சியின் கூட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விமர்சித்து பேசி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் 'சினிமாவில் ஹீரோயின்களுக்கு உதட்டு வலிக்க முத்தம் கொடுத்து விட்டு ஸ்டேட்டிற்கு ஒரு நடிகைகளுடன் முட்டி வலிக்க டான்ஸ் ஆடி, அப்படி திரும்பி கையை நீட்டினால் இந்த பக்கம் 10 பேர் விழுவான் திரும்பினால் பத்து பேர் விழுவான்.

அதை பார்த்துவிட்டு நாம் கை தட்டுவோம். சினிமா நடிகர்களுக்கு மட்டும் ரிட்டயர்மென்ட் ஆகி அரசியலுக்கு வந்தால் நேராக முதலமைச்சர் தான் வில்லன்களுக்கு எல்லாம் எதுவும் தர மாட்டீர்களா என்னப்பா இது அநியாயம்.எல்லா கோட்டக்களையும் இவர்களை எடுத்துக் கொண்டால் என்ன செய்வது கொடுமையாப்பா, அப்போ நீ யார்? சினிமாகாரன் தானே என்று கேட்டால், நான் கூலிக்காரன் என்று பேசி இருக்கிறார்.

மன்சூர் அலிகான் இப்படி பேசி இருப்பது விஜய்யை தான் என்று பலர் கமண்ட் செய்து வருகின்றனர். அதற்க்கு காரணம் விஜய் நடித்த லியோ படத்தில் தான் திரிஷாவுடன் முத்தக்காட்சியில் நடித்தார் விஜய்.மேலும், கிளைமாக்ஸ்ஸில் ஒரே ஆளாக 100பேருக்கு மேலும் அடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்து.

Tamil Behind Talkies AMP · Quick view
View full