யாரு நீ, போய் கோர்ட்ல் கேஸ் போடுப்போ - வழக்கறிஞர்களுடன் மன்சூர் அலிகான் வாக்குவாதம்

By subhashini · 27/12/2023

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்த இவர் பின்னர் சுயேட்சியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றார். பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

சரக்கு படம்:

தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சரக்கு. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையில் நடந்து இருக்கிறது. அதோடு இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு பக்தி பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=ij6k8rtUzeo

மன்சூர் அலிகான்-திரிஷா விவகாரம்:

மேலும், சரக்கு படத்தின் ப்ரோமோஷன் ஆரம்பித்ததில் இருந்தே மன்சூர் அலி கான் குறித்து பல சர்ச்சைகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் மோகாசமாக பேசியிருந்தது மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் மன்சூர் அலிகான் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. அதனை அடுத்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்பதாக சொன்னார். திரிஷாவும் மன்னித்து விடுகிறேன் என்று சொன்னார். ஆனால், திடீரென்று மன்சூர் அலிகான், நான் மரணித்து விடு என்று தான் சொன்னேன்.

மன்சூர் அலிகான் மீது வைத்த குற்றச்சாட்டு:

அதை தப்பாக சொல்லி எழுதிவிட்டார்கள் என்று கூறி திரிஷா மீது மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் பின் நீதிபதி, மன்சூர் அலிகானை வெளுத்து வாங்கி இருக்கிறார். இப்படி மன்சூர் அலிகான் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் உலாவிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் சரக்கு படத்தின் பிரத்தியோக காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. அப்போது வழக்கறிஞர் ஒருவர் திடீரென்று எழுந்து, படத்தில் வழக்கறிஞர்கள் எல்லாம் புரோக்கர்கள் என்று எப்படி சொல்லலாம்.

https://www.youtube.com/watch?v=SMiOaVTgfH0

கோபத்தில் மன்சூர் அலிகான்:

எங்களை மன்சூர் அலிகான் கொச்சைப்படுத்தி படத்தில் காண்பித்து இருக்கிறார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லியிருக்கிறார். இதனால் கடுப்பான மன்சூர் அலிகான், யாருடா நீ? உன்னை யாரு உள்ள விட்டா? என்று அவரிடம் சண்டைக்கு சென்றார். இதனால் அந்த இடத்திலேயே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதை அடுத்து மன்சூர் அலிகான் மீது இன்னும் என்னென்ன வழக்கு வரப்போகிறதோ? என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full