லியோவின் லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி வைத்திருந்த நடிகர் குறித்து உளறிய மன்சூர்

By subhashini · 15/8/2023

லியோ படம் குறித்து மன்சூர் அலிகான் கொடுத்திருக்கும் அப்டேட் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

லியோ படத்தில் அனுராக் காஷ்யப் :

பாலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது இவர் லியோ படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அவர் படத்தில் இறப்பது போன்ற காட்சிகள் கிடைத்தாலும் சரி என்று கூறியிருந்தார். ஆனால், இந்த படத்தில் அனுராக் காஷ்யப்.நடிப்பது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

மன்சூர் அலிகான் வீடியோ:

அதே போல இந்த படத்தில் நடித்த பல முக்கிய நடிகர்கள் பற்றிய விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி வைத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள அனுராக் காஷ்யப் பற்றி பேட்டி ஒன்றில் உளறி இருக்கிறார் மன்சூர் அலிகான். அதில் அவர், இந்தி நடிகர் அனுராக் காஷ்யப். லியோ படத்தில் நடிப்பதாக செய்திகள் எல்லாம் வெளியாகிருந்தது. ஈவினிங் நேரத்தில் நான் செய்தி படிக்கும் போது அவருடைய படத்தில் ஒரு சாவுற மாதிரி காட்சியில் நடித்தால் கூட போதும் என்று சொல்லினார்.

நெட்டிசன்கள் கிண்டல்:

உடனே அடுத்த நாள் கேரவனில் போய் பார்க்கும்போது அவர் உட்கார்ந்து இருந்தார். நானே ஆச்சரியமாக பார்த்தேன். அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியவில்லை. வந்தாரு டப்பு டப்புன்னு சுட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அய்யய்யோ லியோ படத்தை பத்தி எல்லாம் சொல்ல முடியாது போ மேன் என்று பேசி இருக்கிறார். இப்படி மன்சூர் அலிகான் பேசி இருக்கும் வீடியோவை தான் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். லோகேஷ் கனகராஜ் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த லியோ படத்தை குறித்து மன்சூர் அலிகான் உளறி தள்ளியிருக்கும் வீடியோவுக்கு மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full