லியோ நான் ரெடி பாடல் - தனது பங்கிற்கு ஒரு சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான். ரசிகர்கள் கண்டனம்.

By Rajkumar · 30/6/2023

விஜயின் லியோ பட பாடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் கார் ஓட்டிக்கொண்டு நடனம் ஆடி இருக்கும் வீடியோவை குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் கமெண்ட் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=hDJAtAJBcXM&embeds_referring_euri=https%3A%2F%2Fchennaimemes.in%2F&source_ve_path=MjM4NTE&feature=emb_title

படம் குறித்த தகவல்:

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப்பாடலில் கிட்டத்தட்ட 500 டான்ஸ்டர்கள் விஜயுடன் இணைந்து ஆடுகிறார்களாம். பிரபல நடன இயக்குநர் தினேஷ் இந்தப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்துள்ளார்.

லியோ பட பாடல்:

மேலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நடனமாடி வெளியிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, லியோ படத்தின் வந்த நா ரெடி பாடலுக்கு நடிகர் மன்சூர் அவர்கள் கார் ஓட்டிக்கொண்டே நடித்து நடனமாடிருக்கிறார். இந்த வீடியோவை இவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள் பலருமே, சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் நடிகர் மன்சூர் அலிகான் நடந்திருக்கிறார். அவருடைய பாதுகாப்பு மட்டுமில்லாமல் மற்றவர்களின் பாதுகாப்பையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் பாடலுக்கு நடனம் ஆடி இருப்பது அவருடைய உயிருக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இது குறித்து நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full