பீக்ல இருந்த டைம்ல் 21 வயசுல கல்யாணம் பண்ண காரணம்- நடிகை மந்த்ரா சொன்ன விஷயம்

By subhashini · 17/10/2024

உடல் எடை, கேரியர் குறித்து மனம் திறந்து நடிகை மந்த்ரா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மந்த்ரா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் உள்ள முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். இடையில் இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையாததால் சினிமாவில் பிரேக் எடுத்து கொண்டார்.

பின் இவர் திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணத்துக்குப் பிறகும் இவர் தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து இருந்தார். பின் மந்த்ராவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிப்பதை முழுக்கு போட்டு தற்போது மீண்டும் நடித்து வருகிறார். அதோடு இவர் ஜெமினி டிவி, ஸ்டார் மா போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் இடையில் இவர் உடல் எடை அதிகரித்து இருந்தார். பின் உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக இருக்கிறார். அதோடு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மந்த்ரா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மந்த்ரா, கிளாமர் என்பது ஒரு தனிப்பட்ட நபர்களுடைய பார்வையை பொறுத்தது. செக்ஸியாக பார்ப்பது வேறு, கிளாமராக பார்ப்பது வேறு. சேலை கட்டிக்கொண்டு வந்தால் கூட நீங்கள் கிளாமராக பார்ப்பார்கள். கிளாமரை பொறுத்தவரை என்னுடைய இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதை அப்படியே நான் நடித்து விடுவேன். காரணம் அது அவருடைய படம். அவருக்கு என்னை எப்படி காட்ட வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், எனக்கு ஏதாவது கஷ்டமாக இருந்தால் அதை நான் அவரிடம் சொல்லி விடுவேன்.

உடல் எடை குறித்து சொன்னது:

மேலும், திருமணத்திற்கு பிறகு தான் நான் வெயிட் போட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி நான் நிறைய படங்களில் பிஸியாக நடித்திருந்தேன். அதனால் என்னுடைய உடல் எடையில் கவனமாக இருந்தேன். பிடித்த உணவுகள் எல்லாம் சாப்பிடாமல் டயட்டில் இருந்தேன். கல்யாணத்திற்கு பிறகு டயட் எல்லாம் விட்டு நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினேன். அதனால்தான் என்னுடைய உடல் எடை அதிகமானது. மீண்டும் நான் படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு டயட், உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்து இருக்கிறேன். என்னுடைய கேரியரில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று தான் நான் திருமணமே செய்து கொண்டேன். எனக்கு அப்போது 21 வயது.

https://www.youtube.com/watch?v=OTpCEUfuXgQ

சினிமாவை விட்டு விலக காரணம்:

எல்லா ஹீரோயின்களுமே 24, 25 வயதில் தான் திருமணம் செய்வார்கள். ஆனால், அதை எல்லாம் நான் பார்க்கவே இல்லை. வீட்டிலும் என்னை பெண் கேட்டு பலர் வந்தார்கள். ஒவ்வொரு கதாநாயகிக்குமே பீக் டைம் என்று ஒன்று இருக்கும். அவர்கள் அந்த பீக் டைம் இறங்கியவுடன் கேரியரை விட்டு விலகிவிடுவார்கள். அதே போல் தான் என்னுடைய மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அதோடு என்னுடைய அப்பாவுமே கேரியரின் பீக்கில் இருக்கும்போதே நீ சினிமாவை விட்டு வந்துவிடு. அப்போதுதான் நீ மக்கள் மனதில் எப்போதுமே நினைவில் இருப்பாய் என்று சொன்னார். அந்த எண்ணம் எனக்கு ஓடிக்கொண்டிருந்தது. அதனால் தான் நான் சினிமாவை விட்டு விலகி விட்டேன்.

திருமணம் குறித்து சொன்னது:

என்னுடைய கடைசி படத்தில் தான் என்னுடைய கணவரை சந்தித்தேன். அவர் அந்த படத்தில் அசோசியேட் இயக்குனராக இருந்தார். இருவருமே பேசி பழகி நண்பர்களானோம். நாளடைவில் எங்களுடைய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனோம். எங்களுடைய காதலை வீட்டில் சொன்ன முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால், நாங்கள் எங்களுடைய முடிவில் உறுதியாக இருந்து ஒரு கட்டத்தில் சமாதானம் செய்து கல்யாணம் செய்து கொண்டோம். எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் குழந்தை இல்லை. இருந்தாலும் நாங்கள் இருவரும் சந்தோஷமாக ஊர் சுற்றுவது, பிடித்ததை சாப்பிடுவது என்று எங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full