அடுத்தடுத்து வரிசையாக 'சந்தியா ராகம்' சீரியலில் வெளியேறும் நடிகர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அடுத்தடுத்து வரிசையாக சந்தியா ராகம் சீரியலில் இருந்து நடிகர்கள் வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த வகையில் பிரபலமான தொடர்களில் ஒன்று தான் சந்தியா ராகம். இந்த தொடர் அக்கா-தங்கை பாச கதையை மையமாகக் கொண்டது. சீரியலில் எதிர்பாராத விதமாக அக்காவுக்கு பார்த்த மாப்பிளையை தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அக்கா- தங்கைக்கிடையே பிரிவு ஏற்படுகிறது. பிரிந்து இருந்தாலுமே ஒருவருக்கு ஒருவர் பாசமாகத்தான் இருந்தார்கள். அப்போது தங்கைக்கு கேன்சர் நோய் வந்ததால் அவர் இறந்து விடுகிறார்.
சந்தியாராகம் சீரியல்:
தங்கையின் மகள் மாயாவை பார்க்கும் பொறுப்பை அக்கா ஜானகி ஏற்கிறார். பல கஷ்டங்களுக்கு பின் மாயாவை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார் ஜானகி. பின் எல்லோருடைய மனதிலும் மாயா இடம் பிடிக்கிறார். இப்படி இருக்கும் தருணத்தில் தான் மாயா, தனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதில் தனத்தை திருமணம் செய்ய இருந்தவர் கெட்டவர் என்று மாயாவுக்கு தெரிய வந்தது. இதனால் தனத்திற்கு கதிரை திருமணம் செய்து வைக்கிறார் மாயா. இனி அடுத்து என்ன? நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
சீரியல் கதை:
இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் அடுத்தடுத்து பிரபலங்கள் வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது பல ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. முதலில் இந்த சீரியல் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே தாரா வெளியேறி இருந்தார். அதற்குப் பிறகு சீரியல் நேரம் மாற்றம் செய்திருந்தார்கள். அதற்குப்பின் கடந்த ஒரு மாதத்திற்குள்ளே மூன்று நடிகர்கள் மாறியிருக்கிறார்கள். பிக் பாஸ் மணிகண்டன் உடைய மனைவியும், நடிகையுமான சோபிதா, சில வாரங்களுக்கு முன்பு தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.
சீரியலில் விலகிய நடிகர்கள்:
தனிப்பட்ட சில காரணங்களால் என்னால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று கூறியிருந்தார். இவரை அடுத்து சில தினங்களிலேயே நடிகர் நவீன் இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். ஆனால், இவர் வெளியேறுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தற்போது சீனு கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்த சுர்ஜித் குமாரும் சீரியல் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், கடவுள் எல்லாத்தையும் ஒரு காரணத்துக்காக தான் செய்கிறார்.
சீரியல் பிரபலம் பேட்டி:
என்னுடைய சொந்த குடும்பத்தை விட அதிகமாக சந்தியாராகம் குடும்பத்தை தான் நேசித்தேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய விலகல் பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சீரியல் தொடர்புடையவர்கள் அளித்த பேட்டியில், வெளியேறியவர்கள் எல்லோருமே தனிப்பட்ட காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால், சிலருக்கு யூனிட்டுடன் கருத்து வேறுபாடுகள் என்று கூறப்படுகிறது. வேலை சுமை, இங்கேயும் அங்கேயும் நடித்துக் கொண்டு இருப்பது, ஷூட்டிங் ஷெடியூல் என பல பிரச்சனைகள் என்று சொல்கிறார்கள். அதோடு இந்த சீரியல் ஓட இயக்குனர் வேறு ஒரு சீரியலுமே இயக்குகிறார். அதனால் அவருக்கு ரேட்டிங் டென்ஷன் அதிகமாக இருக்கிறது. அந்த கோவத்தை நடிகர்களிடம் காட்டுவதாக சொல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.