சாதி வைத்து என்னை பேசாதீர்கள் - மேடையில் ஆவேசமாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்

By subhashini · 29/12/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு கீர்த்தி பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தை பார்த்து பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மாரி செல்வராஜ் குறித்த தகவல்:

கடைசியாக மாரி செல்வராஜ் அவர்கள் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை எடுத்தார்.
இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்ததுது. இந்த படம் மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து மாரி செல்வராஜ் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

மாரி செல்வராஜ் பேட்டி:

இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளை மையமாக வைத்து தான் எடுத்திருக்கிறார். ஆனால், இவர் ஜாதியை மையமாக வைத்து தான் படம் எடுக்கிறார் என்று ஒரு முத்திரை சோசியல் மீடியாவில் உலாவி கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இதற்கான பதிலடியை மாரி செல்வராஜ் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த பாராட்டு விழாவில் கொடுத்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=5VI-Cs2rJ4U

சாதி பற்றி சொன்னது:

அந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ், நான் எப்போதுமே அறத்தின் பக்கம் தான் இருப்பேன். ஜாதியின் பக்கம் கிடையாது. நீங்கள் யாராக இருந்தாலும் நான் ஜாதியின் பக்கம் ஒருபோதும் நிற்க மாட்டேன். நான் அரசியலுக்கு வந்தாலும் ஜாதிக்கு எதிராகத்தான் செயல்படுவேன். ஜாதியோடு ஐக்கிய படுத்திக் கொள்ள மாட்டேன். நான் மானுடத்துக்காக தான் செயல்பட விரும்புகிறேன். ஜாதியோடு என்னை அடையாளப்படுத்தாதீர்கள். சாதி ஒழியுமா? என்று எனக்கு தெரியாது. அதே நேரத்தில் நான் சாதிக்கு எதிரானவன் என்று ஆவேசமாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full