பைசன் படம் எடுக்க காரணம் இது தான் - இயக்குனர் மாரி செல்வராஜ் ஒபன் டாக்

By subhashini · 21/10/2025

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பைசன். இந்த படத்தில் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ். கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் இயக்குனர் மாரி செல்வராஜ், இத்தனை வருடம் கழித்து ஆணிவேராக இருக்க கூடிய ஒரு ஆள திருப்பி கொண்டாட வைத்திருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. ஏன்னா, அவரை தெரிந்து கொள்வது மூலமாக ஒரு கபடி பிளேயர் கிட்ட எவ்வளவு ஒழுக்கம் இருக்கணும், கபடி பிளேயர் எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி வரணும்னு காட்ட நினைத்தேன். சவுத்தில் இருக்கிற வாழ்க்கையில் உணர்ச்சிவசப்படக் கூடாது. அவன் எல்லாத்தையும் தாண்டி வரணும். ஆனால், முக்குக்கு முக்கு கபடி விளையாடுகிற பிள்ளைகள்தான் இருக்கிறார்கள். ஏதோ வகையில் கபடி பிள்ளைகளை தடம் மாத்திடும் என்ற பயம் இருக்கும்.

பைசன் படம்:

கணேஷன் ரொம்ப நேர்க்கோட்டில் வாழ்ந்திருக்கிறார். நான் சினிமாவுக்காக நிறைய நிஜ கதை சொல்வதற்காக சில விஷயங்கள் சேர்த்துக் கொண்டேன். ஆனால், அவர் வாழ்க்கையில் என்னாலயே நம்ப முடியாத அளவுக்கு ஒழுக்கமாக ஒரு நூல் பிடித்த மாதிரி வாழ்ந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையை கேட்கும்போது ஒரு ரொம்ப பிரம்மிப்பாக இருக்கும். அவர் வாழ்க்கை இன்னைக்கு ரத்தமும் சதையாக கடத்திவிட்டோம். நான் 20 வருஷமாக கற்றுக் கொண்ட சினிமாவை வைத்து ஒரு மிகப்பெரிய ஜாம்பவானோட மிகப் பெரிய ஒரு திறமையாளரோட வாழ்க்கையை அப்பட்டமாக கடத்தி விட்டோம் என்பதில் பெரிய சந்தோஷம் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=jPCPk60UCD0

மாரி செல்வராஜ் பேட்டி:

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் மீதான நரேட்டிவை மாற்றுவதற்காக தான் இந்த படம் எடுத்திருக்கிறேன். இனி என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சாதி குறித்து பேசிக்கொள்ள மாட்டார்கள். அதனால் அது அப்படியே இருந்து கொண்டிருக்கின்றது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன், கணேசன் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறார் என்பது எனக்கு தெரியும். அந்த கஷ்டம் இனிவரும் இளைஞர்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த படம் இயக்கி இருக்கிறேன். பலரும் நான் சாதி கதை எடுக்கிறேன், ஏன்? என்று கேட்கிறார்கள். ஒரு கதை ஏன் எடுக்கப்படுகிறது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

சாதி படம் சர்ச்சை:

அதற்காக சென்சார் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் உட்பட்டுதான் நான் படம் எடுக்கிறேன். தனி மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நான் படம் எடுக்க முடியாது. நான் இந்த நாட்டுடைய பிரஜை. என்னை பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதையை சொல்ல எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. நான் சாகும் வரை சொல்லுவேன். உங்க வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு. உங்கள் வாழ்க்கையின் வழியாகவே இதை பார்க்க கூடாது. மாரி செல்வராஜ் ஜாதிக்கு எதிரானவர் என்ற ஸ்டாம் குத்தப்படும். நான் பட்ட வலியும் வேதனையும் அவனுக்கு தெரியும். சமூகங்களுக்கு இடையே ஜாதியை பற்றி தெளிவான பகுதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் படம் எடுக்கிறோம். ஆனால், யாரோ பத்து பேர் செல்வதை மீண்டும் சொல்ல முயற்சிக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full