அவர் தான் இந்த பெயர வச்சார், நான் ஏன் எதுக்குன்னு கேக்கல - தனது குழந்தைகளின் பெயர் குறித்து மாரி செல்வராஜ்.

By Rajkumar · 30/8/2023

தன்னுடைய பிள்ளைகள் குறித்து மாரி செல்வராஜ் கூறியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

மாமன்னன் படம்:

இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

பிரபலங்கள் பாராட்டு:

இந்த படத்தை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு உதயநிதி அவர்கள் மினி கூப்பர் காரை பரிசளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் கிருத்திகா, உதயநிதியுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். பின் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருக்கிறது.

வெற்றி விழா:

அதோடு இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாமன்னன் படக்குழுவினர் வெற்றி விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள். இந்நிலையில் மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா நடந்து இருக்கிறது. விழாவில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பறக்கும் பன்றி குட்டி போல் இருக்கும் சிறிய சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார். பின் விழாவில் மாரி செல்வராஜ் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து விருதை வாங்கி இருக்கிறார்.

விழாவில் மாரி செல்வராஜ் சொன்னது:

அப்போது அவர் தன்னுடைய மகன்களுக்கு இயக்குனர் ராம் சார் தான் பெயர் வைத்தார் என்று கூறியிருக்கிறார். ஒருவருடைய பெயர் யுவான்சுவாங், இன்னொருவருடைய பெயர் நாஸ்தன்கா, நாவினு கூப்பிடுவோம். நான் ஏன் இந்த பெயர்களை வைத்தார் என்று கூட கேட்கவில்லை என்று கூறியிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மாரி செல்வராஜ் அவர்கள் இயக்குனர் ராமிடம் தான் உதவி இயக்குனராக 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full