சினிமாவில் இதை சொல்லணும், இதை பேசக் கூடாதுனு சொல்வது ரொம்ப தவறு - மாரி செல்வராஜ் உருக்கம்

By subhashini · 16/10/2025

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். அதனை அடுத்து இவர் கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை எல்லாம் இயக்கி இருந்தார்.

இவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை. முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் கலையரசன் என பலர் நடித்திருந்தார்கள். தனது வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்துடன் சேர்த்து மிகப் பெரிய அரசியலையும் மாரி செல்வராஜ் பேசி இருந்தார்.

பைசன் படம்:

இதை அடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பைசன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா, விஜயன், பசுபதி, லால், அமீர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இந்த மாதம் 17ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=_-4zlVs5SP0

மாரி செல்வராஜ் பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இதில் பேசிய மாரி செல்வராஜ், சமூகத்தில் என்னென்ன விஷயமோ நடக்கிறது. அதையெல்லாம் பார்த்து அனுபவிக்கிற மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அரசியல் கூட்டங்கள் நிறைய நடக்கிறது. கருத்தரங்குகள் நடக்கிறது. இது போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. அதில் சினிமாவும் ஒரு அங்கம். சினிமாவிற்கு மட்டும் ஒரு தூய்மையான ஒரு பிம்பம் கொடுக்கக் கூடாது. சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லக்கூடாது. சினிமா என்பது ஒரு பவர்ஃபுல்லான ஒரு கலை.

https://www.youtube.com/watch?v=ojroKGZPD58

சினிமா பற்றி சொன்னது:

நான் என்ன படம் எடுத்தாலும் அதை பார்க்கப்போகிற மக்கள் தான் தீர்மானிக்கப்போகிறார்கள். கொண்டாட்டம், துயரம் என பல விஷயங்களை மக்கள் சினிமாவில் தான் பார்க்கிறார்கள். எதில் நேர்மை, நியாயம் இருக்கிறதோ அதை மக்கள் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றுக் கொள்கின்ற மாதிரியான கதைகள் இல்லையென்றால் அது ரஜினி படமாக இருந்தாலும் சரி, மாரி செல்வராஜ் படமாக இருந்தாலும் சரி அதை புறக்கணித்து விடுவார்கள். சினிமா என்றால் இந்த கருத்தைதான் பேசணும், இந்த கருத்தை எல்லாம் பேசக்கூடாது என்று சொல்வது ரொம்பவே தவறு என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full