அப்படிப்பட்டவர்களுக்கு தான் சினிமாவில் மார்க்கெட்டே இருக்காது - இயக்குநர் மாரிசெல்வராஜ் ஆதங்கம்

By subhashini · 7/5/2025

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.

இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். முதல் படமே சூரிக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது. இதை அடுத்து இவர் கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இந்த படங்களும் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. அதன் பின் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘விடுதலை 2’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாரி செல்வராஜ் சொன்னது:

தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன். இந்த படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. தாய் மாமனின் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மாரி செல்வராஜ், எனக்கும் சூரிக்கும் எமோஷனல் ஆன ஒரு தொடர்பு இருக்கிறது. இருவருமே ஒரே வீட்டில் வந்தது போல தான் உணர்வுகிறோம்.

https://www.youtube.com/watch?v=Z47MyJ-b1s8

சினிமா நிலை:

பல இரவுகள் நான் அவருடன் பயணத்திருக்கிறேன். சூரி உடைய உடல் மொழி, அவர் கதை கேட்கும் திறமை இதையெல்லாம் பார்த்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். அதோடு வாழ்க்கையில் எதார்த்தமாக பயணிக்க கூடிய இப்படிப்பட்டவர்கள் எப்போது கதாநாயகர்கள் ஆவார்கள் என நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். நான் கதை எழுதிய பிறகு சாதாரணமான ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்.

https://www.youtube.com/watch?v=aQ1fZdMrsjA

சூரி பற்றி சொன்னது:

உண்மையில் அப்படிப்பட்டவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இருக்காது. நாம் ஒருவருடைய பெயரை சொல்லி இவர் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வோம். ஆனால், அந்த கதையே டம்மி ஆகிவிடுவார்கள். அப்படி இருக்கும் காலகட்டத்தில் அனைத்தையும் சாத்தியமாக்கி இன்று சூரி கதாநாயகனாக மாறியிருக்கிறார். இதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு எனர்ஜி வந்தது போல நான் இன்னைக்கு உணர்கிறேன்.

படக்குழுவுக்கு வாழ்த்து:

யாருமே நடிக்க மாட்டேன் என்று சொன்ன ஒரு கதையை எடுத்துக் கொண்டு சூரியிடம் சென்றால் நிச்சயமாக அவர் நடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை பலருக்குமே வந்திருக்கிறது. இன்னும் சூரி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full