என்னுடைய படங்களுக்கு மட்டும் வன்முறை சாயம் பூசப்படுவது ஏன்? ஆதங்கத்தில் மாரி செல்வராஜ் பேசியது

By subhashini · 22/8/2024

தன் படங்கள் மீதான சர்ச்சைகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் மாரி செல்வராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’.

இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

வாழை படம் பத்திரிகையாளர் சந்திப்பு:

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வாழை படக்குழுவினருடன் பா. ரஞ்சித், வெற்றிமாறன், ராம் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் வாழை படம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ், என்னை ஒட்டுமொத்தமாக புரிந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் வாழை. இந்த படத்தில் வரும் சிறுவன் கதாபாத்திரம் தான் நான்.

மாரி செல்வராஜ் பேட்டி:

என்னுடைய சிறுவயதில் நடந்த ஒரு வருட காலத்தின் கதை தான் வாழை படம். இந்த படத்தினுடைய இறுதி காட்சி என்னுடைய வாழ்க்கையின் முக்கியமான காட்சி. அதை இயக்கும் போது நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த வயதில் என்ன பார்த்தேனோ அதைதான் படத்திலும் காண்பித்திருக்கிறேன். இதில் நான் என்னுடைய அறிவையோ, புத்திசாலித்தனத்தையோ காண்பிக்கவில்லை. நான் யார்? என்று நிரூபித்த பிறகு இந்த படத்தை இயக்க வேண்டும் என்று ரொம்ப நாளாகவே நினைத்திருந்தேன்.

https://www.youtube.com/watch?v=-reL8ukFiac

சர்ச்சைகளுக்கு கொடுத்த பதிலடி:

சொல்லப்போனால், இதை தான் நான் என்னுடைய முதல் படமாக எடுக்க நினைத்தேன். பரியேறும் பெருமாள் கொண்டாடப்பட்ட அளவுக்கு கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் எல்லாம் கொண்டாடப்படவில்லை என்று பா. ரஞ்சித் ஆதங்கமாக கேட்டிருந்தார். தமிழ் சினிமாவில் நிறைய வன்முறை படங்கள் வருகிறது. ஆனால், அதை திரை அனுபவமாக பார்க்கிறார்கள். அதேசமயம் நிஜ வாழ்க்கையிலிருந்த வன்முறையை காட்டும் போது அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்.

சினிமா குறித்து சொன்னது:

என்னுடைய படங்களில் குறைந்தபட்ச வன்முறை காட்சிகள் தான் இருக்கும். மற்ற சினிமாக்கள் எல்லாம் பயங்கரமான வன்முறை காட்சிகளை காட்டுகிறார்கள். ஆனால், அதை கொண்டாடுகிறார்கள். நான் வெளிப்படுத்தும் சின்ன வன்முறை காட்சிகளை கூட பெரிய வன்முறையாக விமர்சிக்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை? எதற்கு என் மேல் வன்முறை சாயம் பூசுகிறார்கள்? நிறைய வன்முறை கதைக்களம் கொண்ட படங்களெல்லாம் வெளியாகிறது. அதையெல்லாம் சாதாரண மனிதர்களுடைய கதை போல பேசுகிறார்கள். அவர்களுக்கு நெருக்கமான கோபத்தை கதையாக கொடுக்கும்போது கோபத்தை காண்பிக்கிறார்கள். இதனால் சுதந்திரமாக என்னால் செயல்பட முடியவில்லை. அடுத்தடுத்த படங்களை இயக்கும்போது எனக்கு பயமும், பதட்டமும் தான் ஏற்படுகிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full