படப்பிடிப்பில் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் புகைப்படம் எடுத்துள்ள மாரிமுத்து - போஸ்டரில் இருந்த வாக்கியம்.

By S.Dhilip Kumar · 8/9/2023

கடைசியாக தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் நின்று மாரிமுத்து எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

மாரிமுத்து திரைப்பயணம்:

ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ரசிகர்கள் முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்திலும் மாரிமுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மாரிமுத்து திடீர் மரணம்:

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். பின் சிறிய பட்ஜெட் படங்களிலும் மாரிமுத்து கமிட் ஆகி நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மாரிமுத்து நடித்த கடைசி ஷூட்டிங் புகைப்படம்:

இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடைசியாக தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் நின்று மாரிமுத்து எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் தான் வைரல் ஆகி வருகிறது. அதாவது, மாரிமுத்து நடித்த ஒரு படம்தான் விழா நாயகன். இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் மாரிமுத்து கடைசியாக கலந்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

கண்ணீர் அஞ்சலி புகைப்படம்:

அந்த புகைப்படத்தில் மாரிமுத்து புகைப்படத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்டிருக்கும். அதன் முன் நின்று மாரிமுத்து செல்பி எடுத்திருக்கிறார். இது சூட்டிங் ஸ்பாட்டில் எதர்ச்சியாக எடுத்த புகைப்படம். தற்போது அது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. படத்துக்காக வைத்த காட்சி தற்போது நிஜத்திலும் நடந்து விட்டது என்று ரசிகர்கள் வேதனையில் புலம்பி வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full