ஜோதிட சாபத்தால் தான் அப்பா இறந்தாரா ? தனது தந்தையின் இறப்பு குறித்து மாரிமுத்து மகன்.

By Arun · 10/9/2023

ஜோதிடம் சாபத்தால் தான் மாரிமுத்து இறந்தார் என்று பரவிய வதந்திக்கு அவருடைய மகன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் மாரிமுத்துவின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. நேற்று முன் தினம் காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Vikram Buddhanesan (@vsb_dentist)

அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்களை பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அதோடு மாரிமுத்துவின் இறப்பு குறித்து சோசியல் மீடியாவில் பலவிதமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் ஜோதிடர் சொன்னது போலவே நடந்து விட்டது என்று நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மாரிமுத்து ஜோதிடர் சண்டை:

அதாவது, கடந்த மாதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் மாரிமுத்து பங்கேற்று இருந்தார். அப்போது அவருக்கும் ஜோதிடர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டிருந்தது. அப்போது ஜோதிடர் ஒருவர், மாரிமுத்துவின் பிறந்த தேதி குறித்து கேட்டு அவரைப் பற்றி கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இடுப்புக்கு மேல் பிரச்சனை இருக்கிறதா? என்று கேட்க மாரிமுத்து இல்லை என்றவுடன் உங்களுக்கு இடுப்பிற்கு மேல் பிரச்சனை இருக்கிறது என்று சொன்னவுடனே மாரிமுத்து வேடிக்கையாக இடுப்பிற்கு மேல் இதயம் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=qH2vRlsQDHM

மாரிமுத்து மகன் அளித்த பேட்டி:

தற்போது இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ஜோதிடர் சொன்னது உண்மையாலுமே பலித்து விட்டது என்று கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் மாரிமுத்துவின் மகன் கூறியது, எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்து விட்டு தான் என்னுடைய அப்பா போயிருக்கிறார். எந்த வேலையிலும் முற்போக்காக செய்ய சொல்வார். மூடநம்பிக்கைகளை ஏற்கக் கூடாது என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஜோதிடம் குறித்து சொன்னது:

அவருடைய கனவுகள் ஆசைகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். அவர் சொல்லிக் கொடுத்த அனைத்தையுமே நான் கடைப்பிடிப்பேன். அதேபோல என் தந்தையின் மரணத்திற்கு ஜோதிடர்கள் சாபமே காரணம் என்று சொல்வதெல்லாம் மூடநம்பிக்கை. அதையும் நான் நம்ப மாட்டேன். தேவையில்லாத பொய்யான தகவல்களை வதந்திகளை பரப்பாதீர்கள் என்று பேசி இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து.

https://www.youtube.com/watch?v=UVZ1u8II7yw

மாரிமுத்து திரைப்பயணம்:

இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full