டேய் நிக்க சொல்லுடா அவன, கடுப்பான மாரி செல்வராஜ் - உண்மை புரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்.

By Arun · 21/12/2023

மாரி செல்வராஜ் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி துவங்கிய மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

https://twitter.com/sumanthraman/status/1736976853766971450

இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த கனமழை குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது.

மாரி செல்வராஜ் :

ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்' என்று பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் இணைந்து மீட்பு பணிகளிலும் மாரிசெல்வராஜ் ஈடுபட்டார்.இந்த நிலையில் அரசு மேற்கொள்ளும் மீட்பு பணியில் எப்படி ஒரு சினிமா இயக்குனர் இடம்பெறலாம் என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

மாரி செல்வராஜ் பேட்டி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் 'இது என் ஊர், என் மக்கள், அண்ணே அம்மாவ காணும், அண்ணே எங்க அப்பாவ காணும், அண்ணே என்னை காப்பாத்துங்கன்னு போன் பண்ணி மொத்த ஊரும் காதறும் போது என்னால் என்ன செய்ய முடியுமோ ஓடி வந்து செஞ்சிகிட்டு இருக்கேன். அதெல்லாம் உணர்ந்தால் தான் புரியும். மீண்டும் சென்னை போனால் தான் நான் இயக்குனர் அதுவரை இந்த ஊரில் ஒருத்தன் தான் நான் என்றும் கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் மாரி செல்வராஜ் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை படகுகள் மூலமாக சென்று மீட்க உதவி செய்து வருகிறார். அந்த வகையில் படகு ஒன்று நிர்க்கமால் சென்ற போது அவனை நிறுத்த சொல் என்று கத்தியுள்ளார். அந்த சமயத்தில் ஹெலிகாப்டர் ஒன்று மேல சென்றுள்ளது. இதனை புரியாமல் ஒரு சிலர் கை காண்பித்தால் ஹெலிகாப்டர் எப்படி நிக்கும் என்று அறிவாளித்தனமாக கமன்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full