சில்க் இறந்த அடுத்த வருசத்துல நான் பிறந்தேன், அவங்க டிசம்பர் 3ல பிறந்தாங்க நான் டிசம்பர் 13, நானும் ஆந்திரா - மார்க் ஆண்டனி சில்க் பேட்டி.

By Siva · 5/9/2023

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் டிரைலரில் சில்க் ஸ்மிதா வரும் காட்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் பல ஹிட் படங்களை கொண்டதா விஷால் சமீப காலமாக ஒரு நல்ல படத்தை கொடுக்க போராடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார்.

இவர்களுடன் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் நடித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய ரிலீசுக்கான வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியானது. இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடி இருக்கிறது.

டைம் டிராவல், ஆக்சன், திரில்லர், கேங்ஸ்டர் போன்ற பலவித ஜர்னலில் இந்த படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், இந்த ட்ரைலரை வரும் பல வசனங்களும் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் சில்க் ஸ்மிதா போல வரும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் படு வைரலானது. அது யார் என்று சமூக வலைதளத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Gandhi Vishnu Priya (@ivishnupriyagandhi)

அவருடைய உண்மையான பெயர் விஷ்ணுபிரியா, இவர் ஆந்திராவை சேர்ந்தவர். சமூக வலைதளத்தில் சில்க்கின் மறுபிறவியாக பார்க்கப்படும் இவர் சில்க் சம்மந்தமான பல வீடியோகளை போட்டு சமூக வலைத்தகத்தில் பிரபலமடைந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய விஷ்ணுபிரியா எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும் எனக்கு இந்த அளவிற்கு ஆதரவாக இருந்த விஷால் சாருக்கும் எஸ் ஜே சூர்யா சாருக்கும் மிகவும் நன்றி.

இது என்னுடைய முதல் படம் முதல் படத்திலேயே இப்படி இரண்டு லெஜன்ட் உடன் நடிப்பேன் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை ஏதோ சும்மா சமூக வலைதளத்தில் வீடியோ பண்ணிக் கொண்டே இருந்தேன் அது என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய பேர் சமூக வலைதளத்தில் என்னிடம் சில்க் ஸ்மிதா போல படத்தில் நடியுங்கள் என்று கேட்டிருந்தார்கள். ஏதோ என்னால் என்ன செய்ய முடியுமோ அதை இந்த படத்தின் மூலமாக கொடுத்திருக்கிறேன்' என்று கூறி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=P5u8vBh4JP0

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணுப்பிரியா ' என் சொந்த ஊர் திருப்பதி நான் Mba படித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சும்மா டிக் டாக் பண்ணி இருந்தேன். ஆனால், அதற்கு முன்னாள் dubsmash musicallyல வீடியோ போடும் போது சிலர் சில்க் ஸ்மிதா மாதிரி இருக்கேன்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அப்போது சில்க் ஸ்மிதா யார்னே எனக்கு தெரியாது. அதன் பின்னர் சில்க் பற்றி தெறித்துகொண்டு அவருடைய பாடலுக்கு ஒரு வீடியோ பண்ணி எங்கள் வீட்டில் காண்பித்து டிக் டாக்கில் பதிவிட்டேன்.

ஒரே நாளில் 11 ஆயிரம் லைக்ஸ் வந்தது. அதன் பின்னர் 20 நாளில் 400k பாலோவர்கள் வந்துவிட்டார்கள். பின்னர் நான் செய்த பல வீடியோ வைரலானது பின்னர் அது தப்பாகிவிடுவோம் என்று நான் டிக் டாக் செய்வதை நிறுத்திவிட்டேன். என்னை பற்றி பேப்பரில் போட்டு இருந்தார்கள். அப்போது என் அண்ணனிடம் காண்பித்து இது என்னென்னு கேட்டேன். அப்போது அவர் சில்க் ஸ்மிதா 1996ல இறந்தாங்க நான் 1997ல பொறந்தேன். அவங்க பிறந்தநாள் டிசம்பர் 3ல பொறந்தாங்க நீ டிசம்பர் 13ல பிறந்து இருக்கீங்க. அவங்களும் ஆந்திராவில் இருந்து வந்தாங்க நானும் ஆந்திராவில் இருந்து வந்து இருக்கிறதா என்றெல்லாம் பலர் சொன்னார்கள். மேலும், சில்க் ஸ்மிதா பல முறை என்ன கனவில் வந்து இருக்கிறார்கள் என்றும் கூறி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full