நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்ட பிரபல ஹீரோ, அடடே இவரா? - நடிகர் சித்ரா லக்ஷ்மணன் சொன்ன உண்மை

By ·

நடிகை கீர்த்தி கீர்த்தி சுரேஷை, பல ஆண்டுகளுக்கு முன் விஷால் வீட்டில் பெண் கேட்டு இருக்கும் விஷயம்தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி பெரிய ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது.

மேலும், பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். இந்தப் படம் மிக பெரிய வெற்றி பெற்று இருந்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக இவர் நடித்த 'ரகு தாத்தா' படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல்:

தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹிந்தியில் 'பேபி ஜான்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் அட்லி தயாரித்திருக்கும் இப்படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில், கீர்த்தி இன்னும் சில தினங்களில் அவரது காதலர் ஆண்டனி என்பவரை கோவாவில் திருமணம் செய்ய இருக்கிறார். தனது திருமணம் குறித்து சமீபத்தில் கூட செய்தியாளர்களிடம் கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார். இந்நிலையில், நடிகர் சித்ரா லக்ஷ்மன் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

சித்ரா லக்ஷ்மன் பேட்டி:

அதில், கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நாம் பேசியிருக்கிறோம். அப்ப இதை யாருமே எடுத்துக் கொள்ளவில்லை. கீர்த்தி சுரேஷ் இந்த நடிகரை திருமணம் செய்யப் போறார், அந்த நடிகரை திருமணம் செய்யப் போகிறார் என்று சொன்னபோது கூட, நாம் திடமாக இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. கீர்த்தி சுரேஷ் பொறுத்த வரை அவர் ஒருத்தரை காதலிக்கிறார். அவரைதான் திருமணம் செய்யப் போகிறார் என்று கூறியிருந்தோம். இந்தச் செய்தி நமக்கு எப்படி தெரிய வந்தது என்பதுதான் முக்கியமான விஷயம். நடிகர் விஷாலோட அப்பா, அம்மா இயக்குனர் லிங்குசாமி குடும்பத்தோட ரொம்ப நெருக்கமாக பழகக் கூடியவர்கள்.

கீர்த்தியை பெண் கேட்ட விஷால் குடும்பம்:

அதனால் ஒரு நாள் லிங்கு சாமிகிட்ட இது குறித்து பேசி இருக்கிறார்கள். மேலும், கீர்த்தி சுரேஷ் உங்களுக்கு தான் ரொம்ப நல்ல பழக்கம் நீங்க ஒரு வார்த்தை அந்த பொண்ணு கிட்ட கேளுங்க. ஓகே என்றால் நம்ம கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். லிங்குசாமி பொருத்தவரை விஷால் குடும்பத்தோடும் விஷாலோடும் ரொம்ப நெருக்கமானவர். அதனால் விஷாலுக்கு நம்ம மூலமாக திருமணம் நடந்தால் நல்லது தானே என்று லிங்குசாமியும் கீர்த்தி சுரேஷிடம், 'இந்த மாதிரி விஷால் வீட்ல உன்னை விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பப்படுறாங்க', உன்னுடைய விருப்பம் என்ன என்று கேட்டிருக்கிறார்.

நோ சொன்ன கீர்த்தி:

அப்போதான் கீர்த்தி சுரேஷ், 'சாரி சார் நான் பல வருடமாக ஒருத்தரை காதலித்து வருகிறேன். அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று லிங்குசாமிடம் சொல்லி இருக்காங்க. இப்படித்தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. அதனால்தான் நான் அப்போவே கீர்த்தி சுரேஷ் வேற ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லை, அவங்க அவரோட காதலர் தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று உறுதியாக சொன்னேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full