லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே போலத்தான் இந்த படத்தில் நடித்த KPY தீனாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போன் கால் பிராங்க் மூலம் பிரபலமடைந்த தீனா, லோகேஷ் கனகராஜ் நடித்த கைதி படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

Advertisement

இந்த படத்தில் கார்த்திக்குடன் படம் முழுதும் பயணம் செய்வார் தீனா. ஆனால், மாஸ்டர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தார் தீனா அதே போல இவரது கதாபாத்திரமும் மனதில் பதியும்படி இல்லை. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் தீனா நடித்ததை பலரும் கேலி செய்து வருகின்றனர். படத்தை விட நீங்கள் வந்த காட்சியை படத்திற்காக கொடுத்த பேட்டி தான் அதிகம் என்று கேலி செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் தீனா,மாஸ்டர் படத்தில் விஜய் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சியில் அஜித் பைக் ஓட்டுவது போலவும் அதற்கு பின்னால் விஜய் அமர்ந்து இருப்பது போன்றும் இருக்கும் ஒரு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், தல ரசிகர்களை கவர நினைக்கிறீர்களா என்று கேலியாக கமன்ட் செய்தார். அதற்கு பதில் அளித்துள்ள தீனா, அது எனக்கு அவசியம் இல்ல, தளபதி படத்துல நடிச்சா தலைக்கு எதிரியா நடுநிலையான ரசிகர்கள் தான் ரெண்டு பேரையும் பிரிக்கிறீங்க என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

ஏற்கனவே இது போன்ற கேலிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தீனா. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாஸ்டர் படக்குழவுடன் தீனா எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு இன்ஸ்டாகிராம்வாசி ஒருவர், டேய் வந்ததே 7 செகன்ட் தானடா என்று கேலியாக கமன்ட் செய்ய, அதற்கு தீனா, எனக்கு அதுவே பெரிய விஷயம் பிரதர். அந்த படத்துல 7 செகண்ட் வர்றதுக்கு எனக்கு 7 வருஷம் ஆச்சி என்று பதிலடி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement