தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம்.

Advertisement

இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. எந்த படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியான இருந்தது, ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் திரையரங்குகளின் திறப்பிற்காக காத்துகொண்டு இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யின் தீவிர ரசிகர்களான சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் என்று பலர் நடித்துள்ளனர்.

அதே போல இந்த படத்தில் மற்றொரு தீவிர விஜய் ரசிகரும் பணியாற்றியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ‘ஆடை’ படத்தை இயக்கிய ரத்னகுமார் தான். இவர் மாஸ்டர் படத்தில் எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சிறு வயதில் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement