தனது பிறந்தநாளுக்கு mr.பிகிலுக்கு உம்மா குடுத்த மாளவிகா மோகனன்.
இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.
https://twitter.com/MalavikaM_/status/1290640062766620672
மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா.
தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவார். நேற்று தான் (ஆகஸ்ட் 4) இவர் தனது 27 வது பிறந்தநாளை கொண்டாடினர்.
https://twitter.com/ThalapathyanDaw/status/1290640295969861635
இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று Mr.பிகில் என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனிடம் உம்மா கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா மோகனும் உம்மா என்று பதிவிட்டுள்ளார்.