விஜய்யின் IT ரெய்டை கலாய்த்த தீனா. தளபதியின் ரியாக்ஷனை பாருங்க.

By Rajkumar · 15/3/2020

சமீப காலமாக விஜய் படங்கள் என்றாலே பிரச்சனைகள் புக் செய்து வருகிறது. தலைவா படம் துவங்கி சமீபத்தில் வெளியான பிகில் படம் வரை பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது விஜய்யை படப்பிடிப்பிற்கே சென்ற வருமான வரித்துறையினர் விஜயை அழைத்து வந்தனர்.

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ.300 கோடி லாபம் கிடைத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏஜிஎஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.

சோதனைக்கு பின்னர் விஜய் வருமான வரி துறை அலுவலகத்தில் நேரிலும் ஆஜராகி விளக்கமளித்தார். மாஸ்டர் படம் நெருங்கும் வெளியில் விஜய் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தியது. நடிகர் விஜய்யின் சம்பள விவரங்களையும் வருமான வரி அதிகாரிகள் வெளிப்படுத்தியும்இருந்தனர். அதில் நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு ரூ .50 கோடியும் “பிகில்” 80 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் "விஜய் தனது வருமானத்திற்காக வரி செலுத்தியுள்ளார், 2015 ஆம் ஆண்டில் தனது" புலி "வெளியீட்டின் போது நடந்த வருமான வரி சோதனைக்கு பின்னர் நடிகர் விஜய் எந்தவிதமான வரி ஏய்ப்பிலும் ஈடுபடவில்லை என்று வருமான வரித்துறையே அறிவித்துலதாவும் செய்திகள் வெளியாகின. இப்படி ஒரு நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் மாஸ்டர் படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களும் பேசினர். அப்போது இந்த படத்தில் மேடையில் பேசிய கலக்கபோவது யாரு தீனா, நான் இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் பைக் இருக்கிறது காலியாக இருக்கிறது என்று அடிக்கடி ரெய்டு போகாதீர்கள். அதாவது பைக் ரைடிங் சொன்னேன் என்று சொன்னதும் அரங்கத்தில் உள்ள அனைவருமே சிரித்து விட்டார்கள். மேலும் இதை சொல்லி முடித்த பின்னர் நடிகர் தீனா இது அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவதற்காக.

நான் சொல்லவில்லை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறினார். தீனா பைக் ரேட் என்று குறிப்பிட்டிருந்தது சமீபத்தில் விஜய்க்கு நடந்த ஐ டிரைட் பற்றி தான் என்பதை அரங்கத்தில் இருந்த அனைவருமே புரிந்துகொண்டார்கள் மேலும் இப்படி சொல்லி முடித்ததும் தளபதி விஜய் தனது மர்மப் புன்னகையுடன் வாயில் கைவைத்து சிரித்துக் கொண்டிருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full