தொடர்ந்து அப்டேட் கேட்ட ரசிகர்கள். மாஸ்டர் இயக்குனர் கொடுத்த பதில்.

By Rajkumar · 18/4/2020

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் 'தளபதி' விஜய். 'சர்கார்' படத்துக்கு பிறகு 'தளபதி' விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய 'பிகில்' திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ரொம்பவும் ஸ்பெஷல். ஆம், 'மாநகரம்' என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர்.

அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான 'கைதி'-யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யுடன் கூட்டணி அமைத்து 'மாஸ்டர்' இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.

https://twitter.com/Dir_Lokesh/status/1248169705841414144

தற்போது, 'கொரோனா' எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், '144' போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 'தளபதி' விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் "மாஸ்டர் எப்போது தான் ரிலீஸ் ஆகும்?" என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு லோகேஷ் கனகராஜ் "வெகு விரைவில் 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும். கொஞ்சம் காத்திருங்கள்.

முதலில் உயிர் பிழைப்போம்.. அதன் பிறகு கொண்டாடலாம்" என்று தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜின் பதிலுக்கு பல விஜய் ரசிகர்கள் "மாஸ்டர் வெளியாகட்டும்.. வேற லெவலில் ஹிட்டாக்கி விடலாம்" என்று கூறியுள்ளனர். 'கொரோனா' பிரச்சனை முடிந்த பிறகு, 'மாஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full