மாஸ்டர் படம் கிறிஸ்துவத்தை ஊக்குவிக்கிறது - BJP பிரபலம் போட்ட பதிவு. இருந்தாலும் ரசிகர்கள் குஷி. ஏன்னு நீங்களே பாருங்க.

By Rajkumar · 2/2/2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

https://twitter.com/thil_sek/status/1355954460552474626

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றி BJP கட்சியை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், மாஸ்டர் படம் ஒரு முழுமையான பேரழிவு. விஜய் ஒரு நல்ல நடிகர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாரோ அவரை தவறாக வழிநடத்தி உள்ளனர். இந்த படம் கிறிஸ்தவத்தை ஊக்குவிக்கிறது & அவதூறான மொழிகளும் இருக்கிறது. விஜய் இவ்வளவு கீழ் தரமாக செல்வார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மாஸ்டர் படம் வெளியான போதே விஜய்க்கு வருமான வரி துறை சோதனை நடைபெற்றது. அதே போல மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று சில குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனை கூட செய்தனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் சில நாள் பாதிக்கப்பட்டும் இருந்தது.

https://twitter.com/vjfanboy/status/1356133577004486656

பொதுவாக விஜய் படங்கள் வெளியானால் சில குறிப்பிட்ட கட்சிகளின் விமர்சனங்களும் எதிர்புகளும் இருக்கத்தான் செய்கிறது. சர்க்கார் படத்திற்கு கூட புகைப்படம் போஸ்டர் துவங்கி படத்தில் மிக்சி கிரைண்டர் உடைக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றது வரை பல்வேறு பிரச்சனைகள் வெடித்தது. அதே போல BJP யை சேர்ந்த முக்கிய பிரபலமான எச் ராஜா, விஜய்யை பற்றி பல விமர்சனங்களை முன் வைத்து இருந்தார். மேலும், விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என்று அவரது வாக்காளர் அட்டையை கூட சமூக வலைதளத்தில் பதிவிட்டது பெரும் விவாதமாக மாறியது.

https://twitter.com/DRRAMAN07/status/1356131680403120134

இப்படி விஜய் படங்களுக்கு அரசியல் பிரபலன்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் விஜய்யின் படங்களுக்கு ஒரு தடங்கலாக பார்க்கப்படாமல் படத்திற்கு ஒரு இலவச விளம்பரத்தை போல தான் பார்க்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். அந்த வகையில் தற்போது அமர் பிரசாந்த் ரெட்டி போட்டுள்ள இந்த பதிவையும் படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் தான் என்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

behindtalkies AMP · Quick view
View full