இந்த கெட்டப்பை மறைக்கவா இத்தனை மாசம் மாஸ்க் போட்டு சுத்தி மாஸ்டர் பவானி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்தாரு?

By subhashini · 9/11/2023

மாஸ்டர் மகேந்திரனின் புது படத்தின் கெட்டப்பை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

https://www.youtube.com/shorts/Y_0907VYJuI

அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பின் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படத்தில் வில்லன் பவானி ரோலில் மகேந்திரன் நடித்து இருந்தார். ஏற்கனவே இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சாரக் கண்ணா போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

மகேந்திரன் குறித்த தகவல்:

மேலும், பல வருடங்கள் கழித்து இவர் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்து இருந்தார். மாஸ்டர் படத்தில் மகேந்திரன் சிறிது நேரத்தில் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார். இதை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் ரிப்பப்பரி. இந்த படத்தை AK the talesman நிறுவனத்தின் சார்பின் இயக்குனர் ந.அருண் கார்த்திக் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=Yr4I5qttZrU

மாஸ்டர் படம்:

மேலும், சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் லியோ படத்தில் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடிப்பார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். மகேந்திரன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட முகத்தில் பெரிய மாஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு கழட்டாமல் இருந்தார். இது லியோ படத்தில் அவருடைய கெட்டப்பாக இருக்குமா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். ஆனால், மகேந்திரன் அதை மறுத்துவிட்டார்.

லேபிள் படம்:

கடைசி வரை மகேந்திரனை லோகேஷ் அழைக்கவில்லை. இருந்தாலும் அதைவிட பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் தற்போது மகேந்திரன் நடித்து வருகிறார். இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லேபிள் என்ற படத்தில் தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்திருக்கிறார். இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நாளை வெளியாக இருக்கிறது. மாஸ்டர் படத்தை விட பத்து மடங்கு பயங்கரமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சமீபத்தில் பேட்டியிலேயே மகேந்திரன் கூறியிருந்தார்.

நெட்டிசன்கள் கிண்டல்:

இது வெப் சீரிஸ். நான்கு எபிசோடுகளை கொண்டிருக்கிறது. இதில் ஜெய், தான்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தற்போது லேபிள் வெப் தொடரில் மகேந்திரன் நடித்திருக்கும் சில காட்சியின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இதை மறைக்கத்தான் மாஸ்க் போட்டு சுத்திட்டு இருந்தியா? பார்ப்பதற்கு பயங்கர காமெடியாக இருக்கிறது. இந்த படத்தில் நீங்கள் கேங்ஸ்டர் ஆக நடித்திருக்கிறீர்களா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full