நீ எப்பயும் தோல்வியான ப்ராடக்ட் தான். புதிய லுக்கை கிண்டல் செய்த்தவருக்கு சாந்தனு பதில்.

By Rajkumar · 28/2/2020

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் தற்போது நடிகர்களு,ம் நடிகைகளும் திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவும் ஒருவர், 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளி வந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு. பிறகு இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார்.

https://twitter.com/raja_rajan29/status/1233003351886819328

அதைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கு, அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதோடு நடிகர் சாந்தனு, இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். இது பலருக்கும் தெரிந்ததே. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒற்றுமை உள்ளது. அதில் ஒன்று பாட்டு பாடுதல், மற்றொன்று நடனமாடுதல். நடிகர் சாந்தனு நடன திறமையை நாம் பல மேடைகளிலும், படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பார்த்திருப்போம்.

இதையும் பாருங்க : பிகினி உடையில் ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ‘இருட்டு’ பட நடிகை.

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்து. இவர்களுடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்கள்.

https://twitter.com/imKBRshanthnu/status/1233008222711074818

சாந்தனு பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் ஒரு சரியான ஹிட் படத்தைக் கொடுக்க போராடி வருகிறார். இருப்பினும் நடிகர் சாந்தனு அவ்வப்போது தனது கெட்டப்பை மாற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நீளமான முடி, தாடியுடன் வித்தியாசமான போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் அதனை கண்ட ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போதும் ஒரு தோல்வியான தயாரிப்புதான்( Neenga epovume failure product tha bro )என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த சாந்தனும் இப்படி நினைப்புதான் நான் தைரியமா என் மூஞ்ச காட்டுறேன், இன்று நிம்மதியாக தூங்குங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று ஒருவருக்கு எதிர்மறையான கருத்தை தெரிவித்து உங்களுடைய கோட்டாவை கொடுத்து விட்டீர்கள் என்று பதிலளித்துள்ளார். நெகட்டிவிட்டிய இக்னோர் பண்ணுங்க என்று மாஸ்டர் படத்தில் வரும் வரிகளை பயன்படுத்தி சாந்தனு விஜய் ரசிகர் என்பதை நிரூபித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full