உங்க மேல இருந்த மரியாதையே போயிடுச்சி மாளவிகாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

By Rajkumar · 3/8/2020

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவரை போலீசார் கைது செய்யப்பட்ட போது மூச்சி திணறி உயிரிழந்தார். அந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து சமூக வலைதளத்தில் #BlackLivesMatter என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்தது.

https://twitter.com/kutty3009/status/1289457579861532672

இப்படி ஒரு நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது புகைப்படத்திற்காக போட்ட கேப்ஷன் நிற வெறியை தூண்டுவதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் சசி குமாரின் மனைவியாக நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் நடத்திய சில போட்டோ ஷூட்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்த மாளவிகா மோகனன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார். முதல் படம் சூப்பர் ஸ்டாருடன் இரண்டாவது படம் தளபதியுடன் என்று டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறார்.

https://twitter.com/venkatrenga99/status/1289745087832850433

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் புடவையில் வித்தியாசமான முறையில் நடத்திய போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த மாளவிகா மோகனன் 'Tribal skin' அதாவது பழங்குடி நிறம் என்று குறிப்பிட்டிருந்தார். இது தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் சிலர், உங்கள் மேலிருந்த மரியாதையை போயிடுச்சி, ஏன் இப்படி பழங்குடி தோல் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் ? உங்களுக்கு சொல்ல வேறு வார்த்தை இல்லையா? அல்லது வேறு ஒரு நிறத்தை பற்றி கூற முடியவில்லையா என்றும், இந்த இந்திய பிரபலங்கள் மதவாதம் மற்றம் இனவாதம் என்றால் என்ன என்பதை எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full