தன்னை பற்றி வந்த மீம்கள் குறித்து மாளவிகா போட்ட பதிவு - என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By Rajkumar · 3/2/2021

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற மாளவிகா மோகனனின் நடிப்பை கேலி செய்யும் விதமாக சமீபத்தில் வைரலாக பரவி மீம் குறித்து மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

https://twitter.com/aravindxd/status/1356480233499553792

தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில், இந்த படத்தில் நடித்த மாளவிகா மோகனையும் விட்டு வைக்காத மீம் கிரியேட்டர்கள். பல்வேறு விதமான மீம்களை போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/MalavikaM_/status/1356876820688211968

இப்படி ஒரு நிலையில் தன்னை பற்றி வந்த மீம்களை பகிர்ந்து மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் , என்னை பற்றிய மீம் விருந்துக்கு நான் கொஞ்சம் லேட் தான். ஆனால், இவை எல்லாம் பெரும் வேடிக்கையாக இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த சில மீம்களை ஷேர் செய்திருக்கிறேன். அதுவும் அந்த டூத் பேஸ்ட் மீமை பார்த்து சிரித்தேன் செத்துட்டேன். நம்மளை பற்றி நாமே சிரிக்க வில்லை என்றால் வாழ்க்கை மிகவும் போரடித்துவிடும், சரிதானே என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full