தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார் மாளவிகா மோகனன். சமீபத்தில் அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவர் உயிரிழந்த சமத்துவம் அமெரிக்காவில் போராட்டதை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள் தனது 14 வயதில் சந்தித்த நிற வெறி பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது, எனக்கு அப்போது 14 வயது தான் இருக்கும். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் எப்போதும் டீ குடிக்க மாட்டார். அவர் அம்மா அவரை டீ குடிக்க அனுமதிப்பதில்லை என்று என்னிடம் கூறினார். அதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு டீ குடித்தால் கருப்பாக ஆகி விடுவார் என்று அவரது அம்மா அவரை பயமுறுத்தி வைத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் அவர் ஒருமுறை டீ கேட்டதற்கு நீ டீ குடித்தால் அவளை (மாளவிகா) போல கருப்பாக ஆகிவிடுவாய் என்று சொன்னாராம்.

Advertisement

என் நண்பன் ஒரு அழகான மகாராஷ்டிரா பையன். நான் மாநிறமுள்ள மலையாளி பெண். அது வரை நான் இப்படி நிறத்தை பற்றிய வேறுபாட்டை கேட்டதே இல்லை. இது எனக்கு குழப்பத்தையும்,வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியது. ஏனென்றால் என்னுடைய நிறத்தை பற்றி யாரும் மட்டமாக விமர்சித்ததில்லை. நமது சமுதாயத்தில் அதிகமாக நிற வெறி மற்றும் இன வெறி அடிப்படையில் வேறுபாடு பார்க்கும் பழக்கம் உள்ளது. கருப்பாக இருப்பவரை ‘காலா’ என கூறுவார்கள். தென்னிந்தியர்கள் மற்றும் வட கிழக்கு இந்தியாவில் இருந்து வருபவர்கள் மீதும் இனவெறி அச்சுறுத்தல் காட்டப்படுகிறது.

அனைத்து தென்னிந்தியர்களும் கருப்பாக தான் இருப்பார்கள் என அவர்கள் நினைகிறார்கள். வட கிழக்கு இந்தியாவில் இருந்து வரும் நபர்கள் அனைவருமே சிங்கி என்று அழைக்கின்றனர். அதோடு கருப்பாக இருப்பவர்களை நீக்ரோ என்றும் சொல்கின்றனர். வெள்ளையாக இருப்பவர்கள் அழகு என்றும் கருப்பாக இருப்பவர்கள் அழகில்லை எங்கும் குறிப்பிடுகிறார்கள். அதை எதிர்த்து நமது பங்கிற்கு குரல் கொடுக்க வேண்டும். நம்மை சுற்றி ஒவ்வொரு நாளும் இந்த கொடூரம் நடக்கிறது. ஒருவர் அன்பான நபராக இருந்தால் தான் உண்மையான அழகு. அது நிறத்தை பொறுத்து இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement