இறுதியில் மாஸ்டர் பட நடிகை மூலம் வெளியான வலிமை அப்டேட் - இவங்களுக்கு எப்படி தெரியும்னு கேக்குறீங்களா ? வீடியோ இதோ.

By Rajkumar · 9/2/2021

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்..இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் பட நடிகை மூலமாக வலிமை படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான பலர் நடித்து இருந்த நிலையில் ஒரு சில புதுமுகங்களும் நடித்து இருந்தனர். அந்த வகையில் இந்த படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா .இந்த படத்தில் இவர் சில நிமிட காட்சியிலேயே நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இந்த டாக்டர். இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/SangeethaV_Offi/status/1358959162411995136

இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்துள்ளாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் வலிமை படத்தை பற்றி கூறும்போது. அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத் உடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். படத்தின் பணிகள் 99.9 சதவீதம் முடிந்துவிட்டது என்றும் படத்தின் அப்டேட் வெகு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார். இதுநாள் வரை போனி கபூர் கூட சொல்லாத அப்டேட் சொல்லை தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளார் மாஸ்டர் மதி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full