விஜய்யிடம் கருத்து கேட்ட விஸ்வாசம், மாஸ்டர் பட நடிகை - ஒரே டீவீட்டால் மாய்ந்து கொண்ட அஜித் விஜய் ரசிகர்கள்.

By ·

சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பல்வேறு படங்களில் தோன்றுகின்றனர். அந்த வகையில் தெய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணியும் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர், ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார்.

https://twitter.com/ThalaAditya/status/1361176613635825665

ஆனால், தமிழ் சினிமாவை விட அம்மணி தெலுங்கு சினிமாவில் தான் மிகவும் பிரபலம்.தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது இந்த டெலீடட் வீடியோ வெளியான பின்னர் தான் தெரிந்ததுவிஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 16 நாளில் அமேசான் பிரைமைல் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டது.

ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பெண்கள் ஆடை சுதந்திரத்திற்கு ஆதரவாக அமைக்கப்பட்ட இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கினார்கள் என்று தான் பலரும் வருத்தம் தெரிவித்து இருந்தார்கள். இதுகுறித்து சுரேகா தெரிவிக்கையில் . இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

https://twitter.com/its_ArunMathew/status/1361179013989888001

இந்த வாய்பை கொடுத்த லோகேஷ் கனகராஜிற்கு நன்றி, சூப்பர் ஸ்டார் விஜயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்றுகூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சுரேகா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு 'சில ஆக்ஷன் படங்களை பரிந்துரைக்குமாறு' பதிவிட்டு இருந்தார். இந்த டீவீட்டை பார்த்த பலரும் விஜய்யின் சுரா, குருவி, புலி படத்தை பாருங்க என்று விஜய்யின் பிளாப் படங்களை சிபாரிசு செய்து கேலியாக கமன்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/KVinothmec/status/1361215938226315266

சுரேகாவின் இந்த டீவீட்டால் விஜய் ரசிகர்கள் அஜித்தின் பிளாப் படங்களை கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், ட்விட்டர் வாசி ஒருவர், உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா?? தேவை இல்லாம ஃபேன்ஸ் வார் கிரியேட் பண்றதுக்கு இத கேக்க வேண்டியது.. ஏன் நீங்கல்லாம் alienah..?? ஒண்ணுமே தெரியாத உங்களுக்கு...?? என்று கோபமோடு பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full