அதை பற்றி மாஸ்டர் குழு அணுகினால், அரசு நிச்சயம் பரிந்துறை செய்யும் - விஜய் ரசிகர்களுக்கு அமைச்சர் இன்ப அதிர்ச்சி.

By Rajkumar · 4/12/2020

தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக அறிமுகம் ஆகி இன்று தளபதி என்ற அந்தஸ்துடன் இருக்கும் நடிகர் விஜய் தனது திரை பயணத்தில் 28 ஆண்டுகளை எட்டியுளளார். இந்த நாளில் மாஸ்டர் படத்தை பற்றிய ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் வெளியிட்டு விவரம் குறித்து படக் குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது 'சூரரை போற்று' படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.

அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவாது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர். இருப்பினும் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிட திட்டமிட்டு Netflix நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாக சமீபத்தில் பரவியது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படக்குழு வெளியீட்டு தொடர்பாக அதிகார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் கொண்டாட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.உங்களைப்போலவே அந்த ஒரு மிகப்பெரிய நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த சில தினங்களாக பல்வேறு வதந்திகள் சென்று கொண்டு இருக்கிறது அதனை தற்போது நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். எங்களுக்கு ஒரு பிரபலமான Ott நிறுவனம் மிகப்பெரிய சலுகையை வழங்கியிருந்தது. இருப்பினும் இந்த படத்தை திரையரங்கில் தான் வெளியிட முடிவு செய்து இருக்கிறோம் என்று தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு விவரங்கள் வெளியாகி இருக்கிறது அதாவது இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த பேச்சு கிளம்பிய நிலையில் மாஸ்டர் படம் ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். விஜய் படம் என்றால் அதிகாலை சிறப்புக் காட்சி நிச்சயம் இருக்கும். அந்த சிறப்பு காட்சியை பார்க்க ரசிகர்கள் போட்டா போட்டி போடுவார்கள். கொரோனா பிரச்சனைக்கு மத்தியில் மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சி சாத்தியமா என்று கேள்வி எழுந்தது.சிறப்புக் காட்சிகள் வேண்டும் என்று மாஸ்டர் படக்குழு எங்களை அணுகினால் தமிழக அரசு நிச்சயம் அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full