ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. பிகில் படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாநகரம், கைதி போன்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதேபோல கைதி படத்தில் தனது குரலால் அசத்திய அர்ஜுன் தாஸ் மற்றும் ஆண்ட்ரியா, மாளவிகா, மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்த நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யா தனது ‘சூரரை போற்று’ படத்தை Amazon OTT தளத்திற்கு விற்றுவிட்டார். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கடந்த நவம்பர் 11 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருந்தது.

Advertisement

அதே போல மாஸ்டர் திரைப்படமும் OTTயில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மாஸ்டர் படம் கண்டிப்பாக OTT தளத்தில் வெளியாவது என்று தயாரிப்பாளர்கள் சிலர் நம்பிகை தெரிவித்து இருந்தனர்.தற்போது தமிழகத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 1122 தியேட்டர்கள் திறக்க தமிழக அரசு அறிவித்தது.இதனால் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியகாது என்று படக் குழுவினர் அறிவித்து இருந்தனர்.

இருப்பினும் நவம்பர் 14 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் இன்று (நவம்பர் 14) மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதே போல இன்று மாலை 6.30 மணிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள திரை அரங்கிலும் ’மாஸ்டர்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறிது.

Advertisement
Advertisement