எம் ஜி ஆர், சிவாஜி காலகட்டத்தில் பல படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் - இப்போ Xerox கடை நடத்தி வருகிறார்.

By subhashini · 15/12/2021

தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபாகர். இவரை மாஸ்டர் பிரபாகர் என்று தான் அழைப்பார்கள். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் சிவாஜிகணேசன், எம்ஜிஆர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பாமா விஜயம், திருமலை தென்குமரி, மூன்றெழுத்து போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதிலும் வா ராஜா வா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகி இருந்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சென்னையில் ஸ்வஸ்த்தி என்ற ஜெராக்ஸ் கடையை நடத்திவருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சென்னையிலேயே கலர் ஜெராக்ஸ் நிறுவனத்தை முதன்முதலில் அமைத்தவரும் பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இதுவரை 155 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். கடைசியாக நான் ஈரம் என்ற படத்தில் நடித்து இருந்தேன். நான் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பதினால் அங்கு பல பேர் வருவார்கள். அப்போது என்னை சில பேருக்கு தெரியும் சில பேருக்கு தெரியாமல் இருக்கும். அதனால் நான் அவர்களிடம் நான் நடிகன் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. அப்படி என்னை பற்றி தெரிந்தவர்கள் என்னிடம் பேசினால் நானும் பேசுவேன்.

அப்படி பழக்கமான இயக்குனர் தான் அறிவழகன். அவர் என்னை பற்றி எல்லாம் தெரிந்த பிறகுதான் ஈரம் படத்தில் நடிக்க வைத்தார். ஒருமுறை நான் நடித்த வா ராஜா வா படத்தில் மகாபலிபுரத்தை பற்றி சொல்லி இருப்போம். அப்போது பிஎம் கூட அந்த படத்தை பார்த்து மகாபலிபுரத்தை பற்றி தெரிந்து கொண்டார் என்று கூறினார்கள். அது உண்மையா? பொய்யா? என்று எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரையில் சின்ன கதாபாத்திரம் பெரிய கதாபாத்திரம் என்பதெல்லாம் தெரியாது. குடும்பத்தை காப்பாற்றனும் வாழ்க்கையில் முன்னேறும் இந்த ரெண்டு காரணத்தினால் தான் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடித்தேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full