என் மகன் தனுஷை விட பெரிய ஆளாக வருவான் - 'இட்லி கடை' பட விழாவில் மாஸ்டர் தீகனின் அம்மா சொன்னது
மாஸ்டர் தீகனின் அம்மா இட்லி கடை பட விழாவில் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் தனுஷ் தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குபேரா படம் நல்ல வசூலை செய்தது. தற்போது தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரன், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
தனுஷ் திரைப்பயணம்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பின் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதை அடுத்து கோவையில் பிரீ ரிலீஸ் ஈவென்ட் கூட நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.
இட்லி கடை விழா:
படத்தில் தனுஷின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மாஸ்டர் தீகன். அப்போது மேடையில் மாஸ்டர் தீகனின் அம்மா பேசியிருந்தது, நான் கும்பிட்ட சிவனும் முருகனும் சேர்ந்து தான் என் மகனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள். படத்திலும் என் மகன் பெயர் முருகன் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். என் மகன் எத்தனையோ படம் பண்ணலாம். ஆனால், இந்த இட்லி கடை படம் அவனுக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். எங்கேயோ ஒரு ஓரத்தில் இருந்த எங்களை கண்டுபிடித்து இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷ் சாருக்கு நன்றி.
https://www.youtube.com/watch?v=1edJ7-xp2KY
மாஸ்டர் தீகன் அம்மா:
சாகுற வரைக்கும் அந்த நன்றியோடு தான் நான் இருப்பேன். என் மகன் கிட்ட, நீ எப்பவும் எவ்வளவு பெரிய ஆளாக உயர்ந்தாலும் தனுஷ் சாருக்கு விசுவாசமாக இருக்கணும் என்று சொல்லி இருக்கிறேன். என் மகன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான். தனுஷ் சாரை விட பெரிய ஆளாக வருவான். எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுவீங்க தனுஷ் சார். நானும் என் மகன் பெரிய நட்சத்திரமாக வருவான் என நினைத்து கொண்டு இருக்கிறேன். என் எண்ணம் நிறைவேறும் அவன் பெரிய ஆளாக நிச்சயம் வருவான் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.