உண்மையான நேர்மையான Rockstar - ரஜினியின் வீடியோவை பகிர்ந்து மாதவன் சிலாய்ப்பு.

By Arun · 10/3/2023

நடிகர் மாதவன் சூப்பர் ஸ்டார் வீடியோ பகிர்ந்துள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தான் ரஜினிகாந்த் ரசிகரின் வீட்டிற்கு விருந்தினராக அவரும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வலம் வரும் வருகிறது.

View this post on Instagram

A post shared by RAJINIKANTH (@rajinikanthtelugufans)

மாதவன் இன்ஸ்டா பதிவு :

அந்த வீடியோவில் ரஜினிகாந்த் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பார்த்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடித்துள்ளார். மேலும் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் "உங்கள் வீட்டிற்குள் வரலாமா" என கேட்டு உள்ளே சென்றுள்ளார். இந்த பதிவு வைரலானதை அடுத்தது சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகரும் நடிகருமாகிய மாதவன் அந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து "என்ன ஒரு உண்மையான ராக்ஸ்டர்" என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவை ரஜினி ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மாதவன் :

நடிகர் மாதவன் நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். சமீபத்தில் நம்பி நாராயணின் வாழ்கை வரலாறு பற்றிய படத்தை எடுத்திருந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் வரும் ஆண்டுகளில் சி.சங்கர் நாயர் வழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full