பிக் பாஸ் 8 ப்ரோமோவை பார்த்து மாயா போட்ட பதிவு-என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

By subhashini · 16/9/2024

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மாயா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

மேலும், கடந்த ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை தான் சேனல் தரப்பில் வெளியிட்டு இருக்கிறது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 8:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என எல்லா தரப்பில் இருந்தும் சில பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் நடிகர் அருண், சீரியல் நடிகர் தீபக், வினோத் பாபு, பவித்ரா ஜனனி, அர்னவ் ஆகியோர் கலந்து கொள்வார் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து பிக் பாஸ் பிரபலம் மாயா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், புரோமோ வீடியோவை பார்த்தேன். சூப்பராக இருக்கிறது.

மாயா பதிவு:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அசத்தி இருக்கிறார். பிக்பாஸ் என்பது ஒரு பொழுதுபோக்கான நிகழ்ச்சி. யார் நல்லவர், கெட்டவர் என்பதை முடிவு செய்யும் நிகழ்ச்சி கிடையாது. பிக் பாஸ் பார்வையாளர்கள்/ ரசிகர்களே, போட்டியாளர்கள் ஒரு நிகழ்ச்சியில் வேலை செய்கிறார்கள். உங்களுக்கு தெரியாத ரகசியங்களும் இருக்கிறது. அதை நாங்கள் சொல்ல மாட்டோம். உங்களுக்கு உண்மை தெரியாது. அது எப்போதுமே மறைக்கப்பட்டு தான் இருக்கிறது. இந்த சீசனில் உதவி கேட்கும் பெண்களை பயமுறுத்தாதீர்கள். அவர்கள் பேசட்டும், பிடித்ததை அணியட்டும். அவர்களுடைய கோபத்தை வெளிப்படுத்த அனுமதி கொடுங்கள்.

போட்டியாளர்களுக்கு சொன்ன அறிவுரை:

அப்படி செய்தால் அவர்களுக்கு கேரக்டர் இல்லை என்று சொல்ல வேண்டாம். பெண்கள் பெண்களுடைய கார்டை பயன்படுத்தட்டும். தயவுசெய்து ஆதாரம் கேட்க வேண்டாம். நீங்கள் தைரியமானவர்கள். வெளியே இருக்கும் வெறுப்பு முக்கியம் கிடையாது. அந்த வீட்டிற்குள் நிறைய நண்பர்களை உருவாக்குங்கள். அதுதான் நிலைத்து நிற்குமே தவிர பணமோ, புகழோ கிடையாது. வெறுப்பும் நினைவுகளும் கூட நிலைக்காது. இணையத்தில் நிறைய வதந்திகள் பரவும். அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக உண்மையாக இருங்கள். உங்களுக்கு பி ஆர் ஏஜென்சி எல்லாம் தேவை கிடையாது.

https://www.youtube.com/watch?v=B37oos72BTg

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

நீங்களே போதும். அப்படி யாரையாவது வேலைக்கு வைத்தால் வெறுப்பை வன்முறையை தூண்டி விட வேண்டாம் என்று அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இது வெறும் நிகழ்ச்சி, பிசினஸ் பணம் அவ்வளவுதான். இது ஒரு அழகான மைன்ட் கேம். அதை நல்லவிதமாக விளையாடுங்கள். எப்போதுமே சரியான விஷயத்திற்காக குரல் கொடுங்கள். அது யாருடைய வாழ்க்கையாவது மாற்றும், நம்புங்கள் நான் பார்த்திருக்கிறேன். தலை நிமிர்ந்து நில்லுங்கள். முக்கியமாக நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full