தீவிர சிவ பக்தன், மகனுக்கு திமுக பிரபலத்தின் மகளுக்கு சாதி மறுப்பு செய்து வைத்த மயில்சாமி.

By Rajkumar · 20/2/2023

சமீபத்தில் மாரடைப்பால் காலமான மயில்சாமி தந்து மகனுக்கு திமுக பிரபலத்தின் மகளுக்கு திருமணம் முடித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.1985 ஆம் ஆண்டு கன்னிராசி படத்திலும் டெலிவரி பாய் வேடத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார்.

இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால், சமீப காலமாக இவரை அதிக படங்களில் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நேற்று இரவு மயில்சாமி மாரடைப்பால் காலமாக இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்று இசை கச்சேரி செய்து இருந்தார். இதில் மயிலசாமியும் கலந்துகொண்டு இருந்துள்ளார். விடிய விடிய சிவராத்திரி பூஜையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்று இருக்கிறார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மயிலசாமி தீவிர சிவ பக்தர், இவர் ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வழிபடுவதும் வழக்கம், தீவிர சிவ பக்தரான இவர் நேற்று சிவராத்திரி தினத்தில் சிவனடி சேர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, சினிமாவிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த அல்டி என்கிற திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மயில்சாமியின் இளைய மகன் பெயர் யுவன். இவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் யுவன். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார். 

மயில்சாமியின் மகன் அன்புவுக்கும் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது . இந்த திருமணத்தில் பல திரை துறை பிரபலங்கள் மற்றும் திமுக பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர். என்னதான் எம் ஜி ஆர் தீவிர பக்தன். ஆ தி மு கவின் தீவிர தொண்டன், சிவ பக்தரான இருந்தாலும் மயில்சாமி தனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full