கல்லால் தாக்கிய பத்திரிகையாளர், திருப்பி தாக்கிய பவுன்சர் - பொன்னியின் செல்வன் விழாவில் சர்ச்சை. வைரலாகும் வீடியோ.

By Rajkumar · 7/9/2022

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு தமிழ் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=bcjQwufjkro

படத்தின் டீசர் :

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும், சைடில் டெக்னிகல் ஆகவும் கலை இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீடு:

அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்தது. மேலும், ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டிருந்தது. இதில் இயக்குனர் மணிரத்தினம், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
மேலும், சில தினங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பலரும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்கள்.

பவுன்சர் பத்திரிகையாளர்களுக்கு இடையே மோதல் :

இவர்களுடன் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களுக்கும், பவுன்சர்களுக்கும் நடந்த சர்ச்சை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒரு பத்திரிகையாளர் கல்லை கொண்டு ஒரு பவுன்சரை தாக்க அவரை பவுன்சரும் திருப்பி தாக்கி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full